பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 25 நவம்பர், 2008 2 கருத்துரைகள்!

நமது வலைப் பூவில் கடந்த மார்ச் மாதம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது பற்றிய செய்தி பதிக்கப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இது பற்றி அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டிய கையாலாகாத அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் தற்போது
பெய்து வரும் கடும் மழைக்கு தாக்கு பிடிக்காமல் அப் பாலம் இடிந்து விழுந்து, போக்குவரத்து முடங்கி விட்டது. பாதிப்பு பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.


8 மாதங்களுக்கு முன்பே சிவப்பு (அபாய) கொடி நட்டப் பட்டும் ஏறெடுத்து பார்க்காத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இப்போது என்ன பதில் சொல்ல போகிறார்கள்?????

தொடர்புடைய முந்தைய பதிவு
மேலும் வாசிக்க>>>> "பாலம் இடிந்தது"

4 கருத்துரைகள்!
ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


தகவல்: R.தவ்ஹீத்
மேலும் வாசிக்க>>>> "வரலாறு காணாத மழை"

4 கருத்துரைகள்!

மழை பெய்வது எல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ்ஆ? என்று நமது வலைப்பூ வாசகர் ஒருவர் முன்பு கேட்டிருந்தார். மழைக்கு நான்கு பேர் பலி, சுவர் இடிந்து இரண்டு பேர் சாவு இதுவெல்லாம் தான் மழை பற்றிய நியூஸ் ஆக நாம் கற்பித்து வளர்க்கபட்டுள்ளோம். உணர்வுகளின் வருடல்கள் தாண்டி மனதை சம்மட்டியால் அடிக்கும் நிகழ்வுகளையும் மழை வெளிக்கொண்டு வரும். உங்களுக்கும் எங்களை போல உணர்வுகள் எனில் உங்களையும் புரட்டிபோடட்டும் இந்த புகைப்படங்கள்.
தில்லி சாஹிப் தர்கா - மேல்தட்டு பரங்கிபேட்டைவாசிகளால், ஜகாத் கடமையாக்கப்பட்ட முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு வாழும் ஒரு பரிதாப குடியிருப்பு. சரியாக பெய்யாமல் போன இந்த இரண்டு நாள் மழைக்கே இந்த நிலை. இதோ இன்று பின்னி பெடலெடுக்கும் இந்த பெருமழைக்கு இந்த மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியின் அழுத்தம் இரவுகளிலும் தீரவில்லை.
நம்மால் நடக்க முடியாது - இந்த குடியிருப்பின் நுழைவாயில்


சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...

சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.

இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......

என்ன செய்ய போகிறோம்..?

மேலும் வாசிக்க>>>> "மழைக்கால தில்லி சாஹிப் தர்கா"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234