ஞாயிறு, 5 ஜூன், 2011

வரும் முன் காப்போம்..!



பரங்கிப்பேட்டையின் பிரதான சாலைகளில் ஒன்றான வாத்தியாப்பள்ளி தெரு சாலையினை தான் படத்தில் காண்கிறீர்கள். தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வால்வு தொட்டி முறையான பாதுகாப்பு வசதியின்றி இப்படி இருக்கிறது. பேருந்து - கார், ஆட்டோ, இரு சக்கர வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் உள்ள தொட்டி அருகினில்தான் குழந்தைகளும் விளையாடி வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நேரும் முன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. தொடர்புடைய அரசுத்துறை நிர்வாகம் கவனிக்குமா?

மீன்பிடி தடைக்கால நிதியுதவி...!

பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதியுதவிக்கான காசோலை வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.  எம்.எல்.ஏ., க்கள் பாலகிருஷ்ணன், முருகுமாறன் முன்னிலை வகித்தனர். 30 மீனவர்களுக்கு உதவி தொகையை சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கி பேசுகையில், "தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். சமூக நலத்துறை மூலம் கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது' என்றார். விழாவில் , அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், டி.ஆர்.ஒ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., இந்துமதி, பரங்கிப்பேட்டை அ.தி.மு.க., நகர செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். மீன்வளத்துறை ஆய்வாளர் ரவிராஜன் நன்றி கூறினார்.

பரங்கிப்பேட்டையில் கலைஞர் பிறந்த நாள்

பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டது, இதனையொட்டி அன்று காலை 8.30 மணியளவில், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில்  பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் - சேர்மன் முத்துபெருமாள் பழம், பிரட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் G.செழியன், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும் நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் உசேன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.அகரம் கொள்ளுமேடு பகுதியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளைச் செயலர் சரவணன் தலைமை தாங்கினார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...