புதன், 13 ஏப்ரல், 2011

வாக்குபதிவில் பெண்கள் ஆர்வம்! நீண்டவரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.


பரங்கிப்பேட்டை: இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகம் ஆர்வத்துடன் தமது வாக்குபதிவினை செலுத்துகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுகின்றனர். பகல் 12.30 மணி நிலவரப்படி, 27 சதவீதம் வாக்குகள் பரங்கிப்பேட்டையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வாக்கப் பதிவினையொட்டி, பரங்கிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய வணிகப்பகுதியான சஞ்சிவீராயர் கோயில் தெரு முனை வெறிச்சோடி காணப்படுகிறது.

பரங்கிப்பேட்டையில் வாக்குப் பதிவு துவங்கியது!

பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்தப் பாதுகாப்புடன் துவங்கியது. பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி, கும்மத்துபள்ளி, சலங்குகாரத்தெரு அரசினர் ஆரம்ப பள்ளி உட்பட கரிகுப்பம், சேவாமந்திர் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிகளில் விறுவிறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி, பெண்கள் அதிக ஆர்வத்துடன் அவர்களுக்கான தனி வரிசையில் நின்று வாக்கு பதிவை செலுத்தி வருகின்றனர். வாக்குச் சாவடிக்குட்பட்ட எல்லையில் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது.

முன்னதாக நேற்றே இந்த வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் வந்து, வாக்களிக்கும் நடைமுறைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. துவங்கியவுடன் ஒரு சில பூத்துகள் தவிர கூட்டம் சற்று குறைவாக இருந்தது. தற்போது (காலை மணி 9.15) மக்கள் கூட்டம் சற்று அதிகமாக வரத்துவங்கியுள்ளது. எல்லைக்கு வெளியே பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் மதிப்புள்ள பிராந்தி பாட்டில்களுடன் கார் பறிமுதல்!

பரங்கிப்பேட்டை : காரில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில்களுடன் நின்றிருந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் ஓட்டல் ஒன்றின் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட பிராந்தி பாட்டில்களுடன் ஸ்கார்பியோ கார் நிற்பதாக குறிஞ்சிப்பாடி தேர்தல் பறக்கும்படை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பறக்கும் படை அதிகாரி சண்முக சிகாமணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று காரை சுற்றி வளைக்க முயன்றனர். 

அதற்குள் கார் டிரைவர் உட்பட 3 பேர் காரில் இருந்து இறங்கி தப்பியோடினர். அதிகாரிகள் காரை சோதனை செய்ததில் 8 கேஸ்களில் 396 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் மற்றும் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தி வரப்பட்ட பிராந்தி பாட்டில்களின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...