பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 29 டிசம்பர், 2009 1 கருத்துரைகள்!ஒரு ஆட்டோவில் எத்தனை குழந்தைகள் போக முடியும்?
ஐந்து என்பது அரசு வகுத்த விதி. எட்டு? பத்து?
பதினேழு சின்னஞ்சிறு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ என்ற பெயர்தாங்கி(ய) வாகனம் ஒன்று இன்று காலை மீராப்பள்ளி அருகே (வழக்கம்போல் வேகமாய்) வந்தபோது பளு தாங்க இயலாத அதன் டயர்கள் முறிந்து கோபித்துக்கொண்டு தனியே சுழன்று ஓடியது. இறைவனின் அருளால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.
குழந்தைகள் யாருக்கும் எந்த காயம் இல்லாமல் தப்பித்து இன்னொரு ஆபத்தை (பள்ளியை) நோக்கி சென்றனர்.
நடக்காத வரைதான் எதுவும் சம்பவம். நடந்து விட்டால் கும்பகோணம் பள்ளியில் நடந்தது போல - விபத்து.
அதிர்ச்சிகரமான இந்த நிகழ்வை நேரில் கண்ட சில சகோதரர்கள் இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். அடுத்து வந்த ஆட்டோவை கவனித்தால் அதிலும் பதினேழு குழந்தைகள்.
என்னடா கொடுமை இது என்று வினவினால், பதினைந்து பேரை ஏற்றினால் தான் காசை பார்க்க முடிகிறது என்று வேறு ஆதங்கப்படுகின்றனர்.
தங்கள் பிள்ளைகள் செல்லும் ஆட்டோவில் அல்லது வேனில் எத்தனை பேர் செல்கின்றனர், வாகனத்தின் தரம் என்ன என்றெல்லாம் கூட கவனிக்க முன்வாராத பெற்றோர்கள் இனிமேலாவது சிந்திப்பார்களா? அல்லது தங்கள் பிள்ளைகளின் உயிரை மேலும் பணயம் வைப்பார்களா?
இது விஷயத்தை சமுதாய அக்கறை கொண்ட சகோதரர் ஒருவர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்ததில் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஆட்டோ வேன் டிரைவர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள், நிர்வாகிகளை அழைத்து ஒரு அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றிற்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் வாசிக்க>>>> "குழந்தைகள் தப்பினர்"

திங்கள், 14 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!

நமதூர் வாத்தியாபள்ளி பள்ளிவாசலை மேலும் விஸ்தரிக்கும் பெருமைமிகு பெரும் பணியின் துவக்க நிகழ்ச்சி நேற்று வாத்தியாபள்ளியில் நடைபெற்றது. தற்போது இருக்கும் பள்ளி கட்டிடத்திற்கு அடுத்து உள்ள இடத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த விஸ்தரிப்பு, பள்ளியுடன் இணைந்தவாறு அமைக்கப்படும்.இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கு மிகச்சரியான கிப்லா திசையினை அதற்க்கான கருவிகள் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ், லால்பேட்டை மற்றும் நமதூர் ஹஜ்ரத், பள்ளி நிர்வாகிகள், முஹல்லா வாசிகள் உட்பட ஊரின் முக்கிய பிரமுகர்களும், குறிப்பாக இளைஞர்கள் பலரும், ஆர்வமுள்ள மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "வாத்தியாபள்ளி விஸ்தரிப்பு"

செவ்வாய், 8 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!
திங்கள், 7 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை:

கும்மத்து பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

முகாமை பேருராட்சி மன்ற தலைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியை, திமுக பிரதிநிதிகள், பேருராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்கள்.

முகாமில் ஈசிஜி, ஸ்கேன், இரத்தம், சிறுநீர், கண் சிகிச்சைகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

பொது மருத்துவமும் நடத்தப்பட்டது.

சில நோயாளிகளுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.செய்தி & படங்கள்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் வருமுன் காப்போம் முகாம்"

0 கருத்துரைகள்!

மேலும் வாசிக்க>>>> "கொடி நாள்"

ஞாயிறு, 6 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக தீ எச்சரிக்கை அமைப்பு, தீயணைப்பு முறைகள், உள்ளிட்ட பயிற்சி நுட்பங்களை விளக்கும் பயனுள்ள் நிகழ்ச்சி நேற்றும் இன்றும் (05.12.2009, 06.12.2009) இரண்டு நாட்கள், ஹாஜி ஹபிபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைபெற்றது. 05.12.09 அன்று மாணவர்களுக்கும் 06.12.09 இன்று மாணவிகளுக்கும் நடைபெற்றது. அளவான எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் அதிகம் பேர் கலந்து கொண்டு தங்களின் ஆர்வத்தினை வெளிக்காட்டினர்.
நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ், சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செய்து வரும் முயற்ச்சிகளை குறிப்பிட்டு பேசினார்கள். மாணவர்களின் வசதிக்கேற்ப எந்த விதமான பயிற்சி வகுப்புக்களும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு எடுக்க ஜமாஅத் தயாராக உள்ளது என்றும் அறிவித்தார்.
பிறகு துபாய் வாழ் சகோதரர் ஹசன் பசர் தீ எச்சரிக்கை அமைப்பு, தீயணைப்பு முறைகள், CCTV, CENTRAL BATTERY SYSTEM உள்ளிட்ட பயிற்சி நுட்பங்களை சாதாரண மாணவனும் புரிந்து கொள்ளகூடிய வகையில் எளிய நடையிலும், விளக்கமாகவும் நடத்தினார். மாணவர்களின் மற்றும் மாணவிகளின் கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார்.

வந்திருந்த நூற்றுக்கு மேற்ப்பட்ட மாணவர்களும் எழுபத்தைந்துக்கும் குறையாத மாணவிகளும் நமது சமுதாய இளம் தலைமுறையினருக்கு மத்தியில் கல்வி மற்றும் அறிவுசார் நுட்பத்திற்கு தேடல் அதிகரித்திருப்பதை அடையாளம் காட்டினார்கள்.

நிறைவாக பேசிய கல்விக்குழுவை சார்ந்த சகோதரர், தனது விடுமுறை காலத்திலும் இதுபோல் சமுதாய பணிகளில் செயல்படும் ஹசன் பசர் அவர்களுக்கும், ஆர்வத்துடன் வந்திருந்த மாணவ மாணவியர்களுக்கும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

இது போல பல நிகழ்ச்சிகள் மேலும் நடத்த ஆலோசனைகள் மாணவ மாணவியர் தரப்பிலிருந்து வந்தது கவனிக்கத்தக்கது.

ஒரு துறையில் கல்வியும் அனுபவமும் பெற்ற ஒருவர் தனது சமுதாய இளம் தலைமுறையின் எதிர்காலத்திற்க்காக இலவசமாக இவ்வாறு நடத்துவது புதுமையாக இருந்தது அதுவும் இதே பயிற்சிக்கு பல ஆயிரங்களில் கட்டணம் வாங்கி படிக்கும் சூழல் இருக்கும் இந்த கால கட்டத்தில்.
இந்த வகையில் இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியே. இது போல பல நல்ல விஷயங்கள் இனி அடிக்கடி நடப்பதை எதிர்பார்ப்போம்.
மேலும் வாசிக்க>>>> "இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தொழில் நுட்ப பயிற்சி விளக்க நிகழ்ச்சி"

0 கருத்துரைகள்!
சனி, 5 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!
வெள்ளி, 4 டிசம்பர், 2009 0 கருத்துரைகள்!

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234