பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 17 ஜூன், 2013 0 கருத்துரைகள்!

சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின்  மாதாந்திரக் கூட்டம் கடந்த வெள்ளியன்று,  M .E  கவுஸ்  மாலிமார்  இருப்பிடத்தில் நடைபெற்றது. 
 
கூட்டத்தில்,  தற்போது  பரங்கிப்பேட்டையில் பள்ளிகளில்  அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வாங்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஜமாஅத் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு மனு அளிக்க கோரி கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
 
மேலும் இந்த ஆண்டிற்கான கல்வி உதவி நிதி ஒதுக்கீடு, திருமண  உதவிக்கான மனு  ஒப்புதல் செய்து நிதி ஒதுக்கீடு, ரமலான் மாத கடைசி வாரத்தில்  இப்தாருடன் கூடிய கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது


ஜமாஅத்திலிருந்து  புதிய ஆம்புலன்ஸ் வாங்க நிதி உதவி கோரி வந்த தொடர்பான பணிகளுக்காக ஜமாஅத் தொடர்பாளர் ஜெய்னுல்லாபுதீனை (ஜெய்லா) நியமனம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

மேலும் வாசிக்க>>>> "கல்வி கட்டணம்: நடவடிக்கை எடுக்க சவூதி கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை அமைப்பு ஜமாஅத்-திற்கு கோரிக்கை..!"

0 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவரும் ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் வகித்தார். பேரணியில்  மழைநீர் சேமிப்புத் திட்டம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பள்ளி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர்.

இதில் பேரூராட்சி து.தலைவர் நடராஜன், செயல் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

படங்கள்: முத்துராஜா
மேலும் வாசிக்க>>>> "மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி!"

0 கருத்துரைகள்!
வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து நடத்தி வரும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டிகைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. மொத்தம் 42 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில்  தகுதி சுற்று ஆட்டங்களை தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது.

இதில புதுவை அணி முதல் பரிசு பெற்று கோப்பையை வென்றது. பரங்கிகப்பேட்டை "ஏ" அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது இடத்தை கே.என்.பேட்டை கடலூர் அணியும், நான்காவது இடத்தை கூத்தப்பாக்கம் கடலூர் அணியும், ஐந்தாவது இடத்தை பரங்கிப்பேட்டை "பி" அணியும் பிடித்தது.

இந்த கைப்பந்து போட்டிகளை ஹெச். முஹம்மது இம்ரான், ஏ. தல்பாதர் மற்றும் நண்பர்கள் வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) சார்பில் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க>>>> "வாலிபால் கோப்பையை வென்றது புதுவை அணி; பரங்கிப்பேட்டைக்கு 2-வது இடம்! (படங்கள்)"

0 கருத்துரைகள்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பகல் சைனா டவுன் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா-வில் நடைபெற்றது. தலைவர் A.R.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தினை G.M.மரக்கச்சி இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

செயலாளர் H.முஹம்மது தாரிக் ஹுஸைன்,  பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் கோரிக்கையான புதிய ஆம்புலன்ஸ், ஜக்காத், குர் ஆன் மக்தபா - ஃபித்ரா, புதிய நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். பொருளாளர் M.G.கமாலுத்தீன் நிதி - நிலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் , புதியதாக பொறுப்பேற்றிருக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர், செயல் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த மாதம் இறுதியில் இறைவனின் அழைப்பினை ஏற்று காலமான சிங்கப்பூர் அமைப்பின் உறுப்பினர் D.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு சப்ர் என்னும் அழகிய பொறுமையை தந்தருளவும், மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறக்கவும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

கூட்ட இறுதியில் தலைவர் A.R.அப்துல் கரீம் நன்றி கூறினார்.

படங்கள்: அண்ணன் மற்றும் MGK
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம்-சிங்கப்பூர் பொதுக்குழு கூட்டம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234