சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் சேலஞ்சர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. துவக்க நிகழ்ச்சியில் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முனுசாமி, நம்மாழ்வார், ராமச்சந்திரன், ராமநாதன் முன்னிலை வகித்தனர். வரதராஜன் போட்டியை துவக்கி வைத்தார். பாபு சீருடை வழங்கினார்.
சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் முதல் நான்கு பரிசுகளாக 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கும் நிகழ்ச்சி சி.முட்லூர் விளையாட்டுத் திடலில் நடந்தது. அணித் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பானுச்சந்தர் முன்னிலை வகித்தார்.
முதல் பரிசு 6,666 ரூபாய் பரங்கிப்பேட்டை ஆர்.சி.சி., அணியும், இரண்டாம் பரிசு 5,555 ரூபாய் ஒரத்தூர் நாட் ரீச்சபிள் அணியும், மூன்று மற்றும் நான்காம் பரிசுகளாக 7,777 ரூபாயை சி.முட்லூர் சேலஞ்சர் இரு அணிகளும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். தமிழ் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர்