பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 8 மார்ச், 2011 0 கருத்துரைகள்!


புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!

பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் என்கிற MYPNO வலைப்பூ துவங்கப்பட்டு 3 ஆண்டுகளை கடந்துவிட்ட இன்றைய தினங்களில் 3 லட்சம் வருகைகளில் மலர்ந்து நிற்கிறது வலைப்பூ. விருப்பு-வெறுப்பற்ற ஒரு நடுநிலையான செய்தி மற்றும் தகவல் சார்ந்த ஊடகமாக மட்டுமில்லாமல் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூகம் சார்ந்த விசயங்களிலும் வா
கர்களின் நன்மதிப்பை பெற்று விளங்குகிறது.

வாசகர்களுக்கு விருந்து படைக்கும் எங்களின் இணையத்திலும் இன்னும் இதை விட பல சிறப்பம்சங்கள் கொண்ட தகவல்களை வழங்கி கொண்டிருக்கிறோம். இடையில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறுகளினால் இணையம் தற்போது வலைப்பூவிடம் மாறி வந்துகொண்டிருந்தாலும், நுட்பப் பிரச்சினைகள் தற்போது சரிசெய்யப்பட்டு இன்னும் நேர்த்தியான அம்சங்களுடனும் புதிய பகுதிகள் பலவற்றை உள்ளடக்கி புத்தம்புதிய பொலிவுடன் இன்னும் சில நாட்களில் உங்களின் ரசனைக்கு விருந்
து படைக்க இருக்கிறது.

இந்த 3 லட்ச வரவுகளின் வாசக உள்ளங்கள் அனைவருக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றி! நன்றி!! நன்றி!!!


அன்புடன்,
-ஆசிரியர் குழு

மேலும் வாசிக்க>>>> "3 இலட்சங்களை கடந்துவிட்ட நம்பிக்கை வரவுகளில் (MYPNO)வலைப்பூ"

0 கருத்துரைகள்!

25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?

சிப்காட்டிலிருந்து 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் கடலூருக்கு. சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம். சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்..... மேலும் வாசிக்க...

கேன்சர் ஏரியா... உள்ள வராதே!

குறிப்பிட்ட சில பண முதலைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சிப்காட்தான் நம்மை போன்ற சமான்ய மக்களுக்கு சாபக்கேடாக வந்து வாய்த்துள்ளது. சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒரு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு. இது குறித்து வலைப்பூவில் ஏற்னகவே 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன? தகவல் வெளியிட்டுள்ளோம். ஒரு சராசரி மனிதனைவிட 2000 மடங்கு கேன்சர் ரிஸ்க் இருக்கிறதாம் இந்த பகுதி மக்களுக்கு. அது மட்டுமின்றி, சிப்காட் கழிவுகள் கடலுக்கு செல்வதால் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்ணுபவருக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதாம், அவர் எந்த நாட்டிலிருந்தாலும் சரி, இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில்.....மேலும் வாசிக்க...
மேலும் வாசிக்க>>>> "சிப்காட் குறித்த MYPNO பதிவுகள்"

3 கருத்துரைகள்!

தமிழக அரசியலில், காங்கிரஸ் - தி.மு.க இடையே ஏற்பட்ட தொகுதி எண்ணிக்கை

உள்ளிட்ட மோதல்களுக்கு முடிவு காணும் விதமாக இன்று பகல் 12 மணியளவில்

63 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட இருக்கிறது, காங்கிரஸ் கட்சி சார்பில்

அஹமது படேல் டில்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்னைக்கு

அனுப்புகிறார் என்று டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை

செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் வாசிக்க>>>> "கிடைத்தது 63...!"

5 கருத்துரைகள்!

நேற்று நள்ளிரவு கடலூர் சிப்காட் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் கிராம மக்கள் அங்கும் இங்கும் அலைந்து அலறியடித்து ஓடினர். சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் என்கிற ஒரு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 65-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தது மட்டுமின்றி பலருக்கு கண் எரிச்சல், வாந்தி, தோல் அரிப்பு ஏற்பட்டது.

இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு அறையை அடித்து நொறுக்கியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். மாவட்ட ஆட்சித்தலைவர் பாதுகாப்புடன் நள்ளிரவு சாஷன் பிரச்சினைக்குரிய தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த இரசாயண பொருட்களை இந்த விஷவாயு கசிவிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. தீயணைப்பு ஊழியர்களை கொண்டு அந்த இரசாயண பொருட்களை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.

பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை உடனே இழுத்து மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்ட்ட கிராம மக்களை திருமண மண்டபம் மற்றம் பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்த விஷவாயு கசிவு செய்தி தொலைகாட்சிகளில் வெளியானபோது பரங்கிப்பேட்டையிலும் சிலருக்கு கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் இந்த எரிச்சலுக்கும் சிப்காட் விஷவாயு கசிவிற்கும் உண்மையில் சம்மந்தம் உள்ளதா என்று தெரியவில்லை.

Photos: File
மேலும் வாசிக்க>>>> "சிப்காட்டில் விஷவாயு கசிவு: 100 பேருக்கு மயக்கம், கண்ணெரிச்சல் - பரங்கிப்பேட்டையிலும் உணரப்பட்டதா?"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234