பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 17 மார்ச், 2011 0 கருத்துரைகள்!

அந்தமான் தீவில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு படகை கடத்தி வந்த கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஜாமின் உசேன் (வயது 40). இவர் சொந்தமாக மீன்பிடி படகு வைத்துள்ளார். இந்த படகை கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் பிஸ்தோ (28), ஷேம்கான் (30), விஜயகுமார் (30), சுரேஷ் (32), ஜரும் (32), கிறிஸ்டின் (28), ஜோஸ் (28), ஸ்டாலின் (30), ராஜன் (30) ஆகிய 9 பேரிடம் மீன் பிடிக்க கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை சரிபாதியை பிரித்து கொள்ளலாம்` என்று கூறினார்.

அதன்பேரில் அவர்கள் 9 பேரும் அந்தமான் தீவில் மீன் பிடித்து வந்து அவற்றை விற்று கிடைக்கும் வருமானத்தை உரிமையாளர் ஜாமின் உசேனுக்கு பாதியையும், மீதியை 9 பேரும் பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையில் இந்த படகை உரிமையாளருக்குதெரியாமல் கடத்தி கொண்டு வந்தால் பிடிக்கப்படும் மீன்களை 9 பேரும் சேர்ந்து விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் திட்டம் போட்டதாக தெரிகிறது.

அதன்படி 9 பேரும் உரிமையாளருக்கு தெரியாமல் படகை கடத்தி கடல் வழியாக நேற்று பரங்கிப்பேட்டைக்கு வந்தனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட படகு பரங்கிப்பேட்டை கடலில் இருப்பது ஜாஸ்மின் உசேனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளாறு கரையோரம் வந்த படகை வழிமறித்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த படகை பறிமுதல் செய்தனர். ஆனால் படகை கடத்தி வந்த 9 பேரில் ஸ்டாலின், கிறிஸ்டின், பிஸ்தோ ஆகிய 3 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுடன் வந்த 6 பேர் எங்கேனும் தலைமறைவாகி விட்டார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படகு உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source: Daily Thanthi - Photo: Model

மேலும் வாசிக்க>>>> "அந்தமான் தீவில் கடத்தப்பட்ட படகு பரங்கிப்பேட்டையில் மீட்பு - கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் கைது"

0 கருத்துரைகள்!

சிதம்பரம், புவனகிரி உள்பட 3 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 9 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அடையாள அட்டை வாங்க மனுசெய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி சிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் கடந்த சில நாட்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து வந்தனர். நேற்று கடைசிநாள் என்பதால் ஏராளமான கூட்டம் வந்தது.

இதில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்தனர். மாலை வரை புவனகிரி தொகுதியில் 1934 பேரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3859 பேரும் மனு கொடுத்தனர். அதன் பிறகும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுத்தனர்.

இதேபோல் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

நேற்று கடைசி நாள் என்பதால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக மனு கொடுத்தனர்.

Source: Daily Thanthi

மேலும் வாசிக்க>>>> "சிதம்பரம் உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 ஆயிரம் பேர் விண்ணப்பம்"

0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் அனைத்து கட்சியினருக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதை நேரடியாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம் கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீத்தாராமன் தலைமையில் நேற்று காலை நடந்தது.

இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவராவ், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரை சுவர் விளம்பரங்கள், விளம்பர டிஜிட்டல் பேனர்கள், கட்சிக்கொடிகள் ஒரு பகுதியாகவும், பணம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி செல்லுதல், இலவசங்கள் விநியோகம் ஆகியவற்றை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 651 சுவர் மற்றும் டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. சார்பில் 1,735, அ.தி.மு.க. சார்பில் 2,082, காங்கிரஸ் சார்பில் 305, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 832, பா.ம.க. சார்பில் 145, தே.மு.தி.க. சார்பில் 250 விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றியதற்கான செலவை அந்தந்த கட்சி வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்.

அதேபோல பணம், பரிசுபொருட்கள் மற்றும் மது கடத்தல் போன்ற தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பணம் கடத்தி வந்ததாக தொடர்பாக திட்டக்குடியில் ரூ.41/4 லட்சமும், கடலூரில் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரியின் தலைமையில் 8 பேர்கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்களின் விசாரணைக்கு பின்னர் அந்த பணத்துக்குரிய ஆதாரங்களை தெரிவித்தால் அந்தபணம் உரியவரிடம் உடனடியாக வழங்கப்படும். இல்லை என்றால் தேர்தல் முடிவடைந்த பின்னரே ஒப்படைக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுப் போட செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்ல வேண்டாம். மருத்துவ செலவுக்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்கவும் எளிதில் அறிந்து கொள்ளவும் அவர்களும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கியில் இருந்து வேட்பாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் அதற்கான விவரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக அதிரடி மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது. அதன்படி பொது இடங்களில் பறக்கவிடப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களும் மறுக்கப்பட்ட விளம்பரங்களில் அடங்கும் என அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை, சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதால் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கட்சிக் கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அவரவர்களே அகற்ற வேண்டும். கட்சி கொடிகளை அகற்றியபின் கொடிக்கம்பங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்து விட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்சி கொடிகளை அகற்றாவிட்டால் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடத்தை விதி மீறல் கண்காணிப்பு குழுக்கள் மூலம் அவைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஆனால் தனியார் இடத்தில் அனுமதி பெற்று கட்சி கொடிகளை பறக்க விடலாம். அதேபோல கிராமங்களில் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்யலாம்.

தேர்தல் பார்வையாளர்களும் செல்போனில் தொடர்புகொள்ள தொடங்கி விட்டார்கள். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்க பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளர். காட்டுமன்னார்கோவிலுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும், சிதம்பரம், புவனகிரிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான 199 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உள்ளோம். வாக்காளர் யாருக்கு வாக்களிக்கிறார் என்ற விவரம் தெரியாத வகையில் வாக்குச்சாவடிக்குள் கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு விவரத்தை பொதுமக்கள் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்.

கடந்த முறை வாக்குபதிவின்போது கம்ப்யூட்டர்களை இயக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை கல்லூரி மாணவர்களை கொண்டு அவை இயக்கப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போல, தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பார்த்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். வாக்குபதிவின்போது எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கம்ப்யூட்டரை முன்கூட்டியே பரிசோதனை செய்து தயார் நிலையில் வைக்கப்படும்.

பொதுமக்கள் வாக்களிக்கும்போது லேப்டாப் கம்ப்யூட்டர் முன்பு நின்று தங்கள் பெயரை ஒரு முறை சொல்லிவிட்டு செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள இந்த நவீனமுறை கையாளப்படுகிறது.

வழக்கமாக பூத் சிலிப்புகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே வீடு தேடி வந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக பூத் சிலிப்புகள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் வீடுகள் தோறும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூட்ட அரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Source: Daily Thanthi

மேலும் வாசிக்க>>>> "பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் - அனைத்து கட்சிகளுக்கும் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவு"

0 கருத்துரைகள்!

சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு புதிய செல்போன் சிம்கார்டுகளை தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வழங்கி உள்ளார்.

இந்த எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் சம்பந்தமான எந்த வித புகார்களையும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அதிகாரி இந்துமதி - 7598703895
(ஆர்.டி.ஓ.சிதம்பரம்)
கல்யாண சுந்தரம் -7598703911
முதன்மை உதவி தேர்தல் அதிகாரி
(ஆர்.டி.ஓ.நேர்முக உதவியாளர் )
கூடுதல் உதவி தேர்தல் அதிகாரி
ராஜேந்திரன் -தாசில்தார் -7598703912
தாசில்தார் ராஜேந்திரன்
பறக்கும் படை அதிகாரி - 7598703931

புவனகிரி சட்டமன்ற தொகுதி
தேர்தல் அதிகாரி- கல்யாண சுந்தரம்
மாவட்டவழங்கல் அலுவலர் -7598703894
உதவி தேர்தல் அலுவலர்-தனசிங்
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் -7598 703909
உதவி தேர்தல் அலுவலர் -சந்திரா
தனி தாசில்தார் சிதம்பரம் -7598703910
பறக்கும்படை அதிகாரி -பாண்டுரங்கன்
குடிமை பொருள் தாசில்தார் சிதம்பரம் - 7598703931

Source: Daily Thanthi

மேலும் வாசிக்க>>>> "சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள புதிய செல்போன் எண்கள்"

0 கருத்துரைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கபடுவதற்கு முன்பே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்து தடாலடியாக தேர்தலை எதிர்கொள்ள களமிறங்கிய ஜெயலலிதா அதே வேகத்தில் கூட்டணி கட்சிகள், அவர்களுக்கு வேண்டிய தொகுதிகள் குறித்து ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு “அல்வா” கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா வெளியிட்ட இப்பட்டியலில் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகள் இடம் பெறவில்லை. ஆதலால் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் தற்போதைய புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிட “நோ சான்ஸ்” என்றாகி விட்டது.

மேலும் இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டதால் இரு கட்சி தொண்டர்களும் சோர்ந்து போய் உள்ளனர்.

மேலும் வாசிக்க>>>> ""நோ சான்ஸ்""

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234