வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படங்களைத் தவறாமல் பார்க்க வேண்டும்!
கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது.
கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்!
நாளை நமதூரிலும் இந்த நிலை வர வேண்டுமா?
பரங்கிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் சாராய கடையை அகற்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNO ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ வைத்த கோரிக்கை....
"பரங்கிபேட்டை பஸ்நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு பல வகையிலும் இடையூறாக உள்ளது.
அதன் சுற்றுப்புறத்தில் கோவில், மசூதி, காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை, குடியிருப்புகள் மற்றும் கடைகள் என பல்வேறு தரப்பு மக்களும் வந்துச் செல்லும் இடமாக உள்ளது.
குடிகாரர்களின் பிரச்சினையால் பேருந்துக்கு காத்துக் கிடக்கும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உட்பட பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகின்றனர்.
எனவே, பரங்கிப்பேட்டையில் சாராய கடைகள் இல்லாத நகரமாக மாற்றி அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
அதற்கு பொறுப்பான(!) முறையில் பதில் அளித்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்...
TASMAC shops at Parangipettai were located as per Govt norms.
There is no Temple and Educational institutes near TASMAC shops.
Letter No RV6/2416/2014 dated 30.12.2014.
District Manager, TASMAC, Cuddalore
அப்படி என்றால்... "அங்குள்ள பள்ளிவாசல் வழிப்பாட்டுத்தளம் கிடையாது. பொதுமக்களுக்கு எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் கவலையில்லை" என்ற மெத்தனப் போக்கு இந்த பதிலில் உள்ளது.
எப்படி அந்த கடையை அகற்றுவது? பதில் சொல்லுங்களேன்....