பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 14 ஏப்ரல், 2009 1 கருத்துரைகள்!

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:

 • எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
 • 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 • பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:

 • இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
 • இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:

 • டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • வயது வரம்பு 32.
 • இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

விண்ணப்பிக்க என்ன நடைமுறை?

விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?

மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.

சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.

தொடர்புக்கு:
ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.

விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி

விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.

இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது.

 • ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
 • பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம்.
 • 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும்.
 • 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும்.
 • அழகான தோற்றம் தேவை.

இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப்பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து 'ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.

இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது.

வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.

எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.

முகவரி:
தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ், 2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736. செல்: 98401 16957.

மேலும் வாசிக்க>>>> "தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்"

0 கருத்துரைகள்!

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். இக் கூட்டங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.

எள்ளேரி, லால்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் நெய்வேலி சென்றார்.

சென்னையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 15-ம் தேதி மீண்டும் சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - திருமாவளவன் பேச்சு

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.

ஆதரவு திரட்டினார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக அக்கட்சியின் அமைப்பாளர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.கூட்டணியில் போட்டி

சிதம்பரம் தொகுதிக்கு நான் நன்கு அறிமுகமானவன். உங்களை நம்பி தான் நான் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் என்னை வெற்றிபெற செய்ய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது பா.ம.க.சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமியிடம் நீங்கள் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

அதன்படி அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன், சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. அதே அமைச்சர் என்னிடம் நீங்கள் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சரியாக இருக்கும்.

40 தொகுதிகளிலும் வெற்றி

விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து தேர்தல் களப் பணியாற்றி சிதம்பரம் உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் கூறினார்.

நிகழ்ச்சிக்கு தி.மு.க.ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற முகமது யூனுஸ் வரவேற்று பேசினார். இதில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தாமரைச் செல்வன், புவனகிரி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மண்டல பொறுப்பாளர் காவியச் செல்வன், மாவட்ட ஊடக மைய செயலாளர் முடி கொண்டான், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், வட்டார தலைவர் சேதுமாதவன், இளைய பெருமாள், தமிழ்வளவன், ரமேஷ், காஜாகமால், நகர செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் புவனகிரியிலும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணிகட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் நாசர், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுத ராணி தனசேகரன், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் கந்தன், டாக்டர் மனோகர், முன்னாள் யூனியன் தலைவர் பழனிச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், வட்டார தலைவர் சிவக்குமார், சவுந்திர பாண் டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராம் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன், ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர அமைப்பாளர் செந்தில், ராமர், முத்து, எழில்வேந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை பகுதியில் தொல்.திருமாவளவன் சுற்றுப்பயணம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234