இறைவன் நாடினால் மேலும் முக்கியத்துவம் பெறப்போகும் நபர்.
தற்போது பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் நம் மாணவ செல்வங்களுக்கு ஒரு முன்னுதாரண நபர்.
நூர் முஹம்மது நைனா-
இந்த மாணவரின் பெயர்.
பெரிய தெருவை சேர்ந்த இந்த மாணவர், தனது விடா முயற்சிக்கு ஒரு திடமான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.
இன்று மேற் கல்வி துறையின் அடையாளமாக கருதப்படும் அண்ணா பல்கலை கழகத்தில் நமதூரில் இருந்து சென்று பயிலும் முதல் மாணவர். நாமறிந்தவரை இதற்க்கு முன் நம்தூரை சேர்ந்த ஜனாப். ஷாபி (பொறியியலாளர்) அவர்கள் தான் அண்ணா பல்கலை கழகத்தில் சென்று படித்த ஒரே ஒருவர். அவருக்கு பின் இவர் தான். இந்த மாணவரின் முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் சிறு வயது முதலே கல்வியில் இவரின் ஆர்வத்தினையும், கேள்வி ஞானத்தையும் நான் மிக அறிவேன்.
ஊருக்கு ஒரு டாக்டர் , வக்கீல் என்ற கணக்கில் இவரது சாதனை இல்லாவிட்டாலும், (இன்ஷா அல்லாஹ் அதைவிட மேலும் சாதிப்பார்) கல்வியில் காலம் காலமாய் பின்தங்கி இருக்கும் ஒரு சமுதாயத்தில் இருந்து icon of education என்று கருதப்படும் ஒரு வாயிலுக்கு சென்று தனது கல்வி தேடலை தொடரும் இந்த சாதனை மாணவனை சாதாரணமாக கை குலுக்கி பாராட்டியவர்கள் கூட குறைவே. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நமது மக்களின் மனோபாவம் பூரிக்க செய்கிறது.
மிகவும் முயன்று சாதித்திருக்கும் இவரை மேலும் சாதிக்க வலைப்பூ சார்பாக்வாழ்த்துகிறோம்.