வியாழன், 11 ஏப்ரல், 2013

மரத்துக்குள் மரம்


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையில் ஒரு அரச மரமும் பனை மரமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரே மரமாய் காட்சியளிக்கிறது.

தெளலத்துன்னிஸா மகளிர் அரபிக்கல்லூரியில் மாணவியர் சேர்க்கை தொடங்கியது!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அண்ணா நகரில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வரும், அல்ஹாஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வரும், தெளலத்துன்னிஸா மகளிர் அரபிக்கல்லூரியில் முபல்லிகா பட்டத்திற்கான மாணவிகள் சேர்க்கை  நடைபெற்று வருகின்றதாகவும், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, மற்றும் பட்டப்படிப்பு படித்த மாணவிகள்  மார்க்க கல்வி பயில வேன் வசதி செய்யப்பட்டிருப்பதாகவும். அல்ஹாஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் இக்கல்லூரியில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த 48 மாணவிகளும், விடுதியில் தங்கி படித்த 41 வெளியூர் மாணவிகளும் முபல்லிகா பட்டம் பெற்றிருப்பதாகவும்  ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பாக நடைபெற இருக்கும், கோடைக்கால தீனியாத் பயிற்சி, இவ்வாண்டு தெளலத்துன்னிசா கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும், இதற்காக முன்பதிவு செய்து கொள்ளுமாறும், வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸின் கோடைகால சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி!

ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸ் கடந்த பத்து ஆண்டுகளாக நமதூரில் கம்பியுட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் அவர்களால் அறிவிக்கப்படும் கோடைகால சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியின் மூலம் ஏராளமான் மாணவ மாணவிகள் குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த வருடமும் - கோடை விடுமுறை இன்னும் துவங்காத நிலையிலும் - இதுவரை பலர் கோடைக்கால சிறப்பு கம்ப்யூட்டர் வகுப்புக்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர் (வழக்கம் போல ) முஸ்லிம் பெண்களே ! அவர்களுக்கென்று தனி பெண்கள் பேட்ச் பெண் ஆசிரியர்கள் மூலம் நடைபெறுகிறது. 

மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸில் காணலாம். 

கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்விஸ், கம்ப்யூட்டர் பிரிண்டிங் போன்ற முக்கிய துறைகளில் கால் பதித்து பரங்கிமாநகரின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவதால் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை எந்த ஒரு பயிற்சி நிறுவனத்தை விடவும் மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பாகவும் எளிதாகவும், செயல்முறைக் கல்வியாகவும் ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸ் மாணவர்களுக்கு பயிற்ருவிக்க முடியும் என்பது உண்மை. 

அனைவரும் தாங்களும் தங்கள் பிள்ளைகளையும் ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸ் ஸில் இணைந்து உலகை ஆளும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...