பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: BMD கிளப் தோற்றுவித்து 59 ஆண்டுகள் நிறைவையொட்டியும், மர்ஹூம் D. முஹம்மது அப்துல் காதர் நினைவாகவும் அகில இந்திய ஐவர் பூப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ந் தேதி காலை முதல் 10ந் தேதி இரவு வரை பரங்கிப்பேட்டை BMD மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
மிகவும் விமரிசையாக நடத்தப்படவுள்ள இப்போட்டிகளில் முதல் பரிசு ரூபாய் 40 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 25 ஆயிரம், நான்காம் பரிசு ரூபாய் 20 ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் என்று ரொக்கப் பரிசுகள் மேலும் பல சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மும்பை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் பல அணிகள் இந்தியாவின் பல பகுதிகளிலிலும் கலந்து கொள்ள இருக்கின்றன.
 
இறுதி நாளான ஞாயிறு அன்று போட்டிகள் முடிவடைந்த உடன் பரிசளிப்பு விழாவும், அதில் BMD கிளப்பின் முன்னாள் விளையாட்டு வீரர்களை கவுரவபடுத்தபடுவார்கள் என்றும், இந்தப் போட்டிகளுக்கு தனி கமிட்டி அமைக்கப்பட்டு ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக இருக்கும் என்றும் BMD வட்டாரம் தெரிவிக்கிறது.


மேலும் வாசிக்க>>>> "BMD கிளப் 59வது ஆண்டு: அகில இந்திய ஐவர் பூப்பந்தாட்டப் போட்டிகள்"

திங்கள், 4 ஆகஸ்ட், 2014 0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை முதலிடத்தை பெறுகின்றது. ஊர் முழுக்க தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் என போக்குவரத்திற்கு பயன்படும் வசதிகள் உள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் சாலை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பக்கீர் மாலிம் தர்கா தெருவையும், பண்டக சாலை தெருவையும் இணைக்கும் பார்க்கான் முடுக்கு வழியாக செல்லும் இணைப்புச் சாலை மண் நிரம்பியதாக இருப்பதால் மழைக்காலங்களிலும், மற்ற நேரங்களிலும் பொதுமக்கள் இந்தச் சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். 

இது குறித்து அங்கு வசிக்கும் அல்லாஹ் முஹம்மது (ஸல்) நற்பணி மன்ற நிறுவனர் கா.மு. கவுஸ் அவர்கள், தன்னுடைய முகநூல் பக்கத்தில், "5வது வார்டு பார்க்கான் முடுக்கு முதல் பண்டக சாலை தெரு முடிய சாலை வசதி வேண்டி 1997 ஆண்டு முதல் 2011 ஆண்டு முடிய 15 வருடங்களாக தனி மனிதனாக நான் கோரிக்கை செய்த பட்சத்தில் 16.02.2012 அன்று நகர ஒருங்கிணைப்பு வளர்ச்சி திட்டத்தின் பிரகாரம் நகர பஞ்சாயத்து குழுவின் உத்தரவின் படி சாலை அமைக்க உத்தரவு கிடைக்கப் பெற்றது. தற்போது 29 மாதங்களை கடந்து விட்ட பிறகு மீண்டும் இந்தப் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைப்பதாக நகர பஞ்சாயத்து குழு 09.07.2014 அன்று (கூட்டம் பொருள் எண்: 9) தீர்மானம் ஆகி 140 மீட்டர் நீளம், மதிப்புத் தொகை ரூ. 1,80,000 என்று E.O அவர்களின் குறிப்பு அனுமதிக்கு வைக்கப்பட்டதாக அறிந்தேன். TPTB நிர்வாகத்திற்கு நன்றி. விரைவில் மழைக்காலம் நெருங்கி விட்டதால் பொது போக்குவரத்து நலன் கருதி இந்த சிமெண்ட் சாலை பணியை பூர்த்தி செய்யுமாறு அப்பபகுதி பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரூராட்சி நிர்வாகமும், வார்டு உறுப்பினரும் விரைவாக இப்பணியை செய்து முடிப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வாசிக்க>>>> "இணைப்புச் சாலை வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை"

0 கருத்துரைகள்!

வரலாற்று சிறப்பு மிக்க பரங்கிப்பேட்டை மக்கள், தான் பிறந்த இடங்களில் மட்டுமல்லாது வியாபாரம், தொழில் செய்ய சென்ற இடங்களிலும், பணியாற்ற சென்ற இடங்களிலும் மனித நேயத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 

சுனாமி, கடும் புயல், வெள்ளப் பெருக்கு போன்ற சமயங்களில் "மனிதம்" மட்டுமே பரங்கிப்பேட்டைவாசிகளிடம் இருந்ததை உள்ளூர்வாசிகள் முதல் உலக ஊடகங்கள் வரை பாராட்டின. 

அந்த வகையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் பரங்கிப்பேட்டை அன்வர் ஹஸன், அந் நாட்டில் பெருகிவரும் கொசுக்களை ஒழிப்பதற்கும், டெங்கு போன்ற வியாதிகளை விரட்டியடிப்பதற்கும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் போராடிக் கொண்டிருப்பதை சிங்கப்பூர் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.


சகோதரர் அன்வர் அவர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் சேவைகள் தொடரவும் MYPNO வாழ்த்துகிறது.
மேலும் வாசிக்க>>>> "சிங்கப்பூர் கொசு ஒழிப்புப் போராட்டம்; அசத்தும் அன்வர்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234