திங்கள், 11 ஆகஸ்ட், 2008

திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் மற்றும் எக்ஸ்நோரா தன்னார்வ அமைப்பினரால் நடத்தப்பட்ட வியாபார சங்க பிரதிநிதிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கச்சேரித்தெரு ஹெச். எம். ஹெச். மண்டபத்தில் 09.08.08 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. சமீப காலமாக பெருகி வரும் குப்பை கழிவுகள குறைப்பது, அதனை எங்ஙணம் மறுசுழற்சிக்குட்படுத்தி கையாளுதல் குறித்த விளக்கங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
கனிணி கொண்டு சிறப்பான விளக்கப்படங்கள் ஒளிபெருக்கி (ப்ரொஜக்டர்) மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை, பிளாஸ்டிக் உபயோக தவிர்ப்பு, முடிந்தளவு வளங்கள முறையாக கையாளுதல் போன்றவையும் அரசு இதுவிஷயமாக எடுத்துவரும் நடவடிக்கைள் பற்றியும் விளக்கப்பட்டது. கூட்டத்திற்கு சொற்பமான நபர்கள வந்திருந்தது சுற்றுப்புற சூழல் எனும் எரியும் விஷயத்தில் வியாபார சகோதரர்கள் கொண்டுள்ள அக்கறையின் அளவை காட்டியது. சைனாவில், மக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக பைகள எடுத்துச்செல்ல அரசாங்கமே உத்திரவிட்டிருப்பது போல, அரசு இதுவிஷயத்தில் இன்னும் சில கூர்மையான நடவடிக்கைகள எடுப்பதை சுற்றுப்புற ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.

செயல்வழிக் கல்வி முறை - பரங்கிப்பேட்டையில் வரவேற்பு

கடந்த ஆண்டு முதல் தொடக்க நிலை கல்வியில் ஏ.பி.எல் எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கல்வி முறை தேவையில்லை என்றும், தேவை என்றும் வாதங்கள் தொடங்கியுள்ளன. ஆனால் பெற்றோர், குழந்தைகள் இந்த கல்வி முறையை வரவேற்கின்றனர்.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முறையில் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்வழிக்கற்றல் முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் உயர்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேர வரும் பல மாணவர்களுக்கு தமிழ் கூட எழுதப் படிக்கத் தெரியாத நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது இம்முறையில் ஒவ்வொரு மாணவனும் அனைத்துப் பாடங்களையும் எழுதப் படிக்கத் தெரிந்தவராக உருவாக்கப்படுகிறார்.

மாணவர்களின் தன்னம்பிக்கையையும், ஆளுமைத் திறனையும் வளர்ப்பதற்கு செயல்வழிக்கற்றல் முறையில் பல வாய்ப்புகள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கிய சக்கரத்தில் குறித்துள்ளவாறு மாணவன் தன்சுத்தம் பேணுகிறான். தினமும் அன்றைய கால நிலையைக் குறிக்கிறான். தன் வருகையைத் தானே பதிவு செய்கிறான்.

தாழ்நிலைக் கரும்பலகையில் தான் படித்ததை தானே எழுதிப் பழகுகிறான். தான் கற்றதை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கிறான் என்பதை கண்கூடாக காணமுடிகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல் வழிக்கற்றல் திட்டத்திற்கு அரசு நிறைய செலவிடுகிறது. பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளிக்கும் இத் திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி பெட்டி மற்றும் டிவிடி பிளேயர் வழங்கப்படுகிறது. பாடஅட்டைகள், குழு அட்டைகள், ஏணிப் படிகள் என பல வண்ணங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு குழந்தையினுடைய அடைவுத் திறனை(Accessing Capacity)யும் ஆசிரியர் குறித்து வைத்துக் கொள்வதால் தனிக்கவனம் செலுத்த முடிகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்துள்ளது. பல பள்ளிகளில் கூடுதலாக குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு புத்தகச் சுமையும், தேர்வு பயமும் நீங்கியுள்ளது. இந்த கற்றல் முறையில் திறமையான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன என சில பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பழைய கல்வி முறையில் எதிர்பார்த்த பலன் இல்லை என்பதாலேயே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை மேம்பாடு அடைந்து
வரும் இத்தருணத்தில், இதை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அவற்றை சரி செய்து கொள்ள முயல வேண்டும் என தலைமையாசிரியர்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.

மொத்தத்தில் மாநில திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார் கொண்டு வந்த இந்த செயல் வழிக்கற்றல் திட்டத்தோடு குழந்தைகள் ஒன்றிவிட்டார்கள் என அத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் பரங்கிப்பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.கலைச்செல்வன் தெரிவித்தார்.

படிப்பிலும் குழந்தைகளுக்கு ஈடுபாட்டை அதிகப்படுத்துகிறது என பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பெற்றோரான ந.ராணி தெரிவித்துள்ளார்.

செயல்வழிக்கற்றல் திட்டம் ஆந்திராவில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். அங்கு தோல்வியுற்ற திட்டத்தை இங்கு புகுத்தியுள்ளார்கள் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளன.

இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியவில்லை என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல்மஜீத் கூறுகிறார்.

செயல்வழியில் கற்பதால் மாணவர்களுக்கு எழுதத்தெரியவில்லை என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

தினமணி

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...