ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

MYPNO சார்பாக வாழ்த்து மடல்

இன்று மீராப்பள்ளி வளாகத்தில் பதவியேற்ற முஹம்மது யூனுஸூக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியின் போது MYPNO சார்பாக வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. இதனைத்
abuprincess
பந்தர்.அலி ஆபிதீன்.
இப்னு இல்யாஸ்
M.Gee.ஃபக்ருத்தீன்
தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களிடம் நேரில் வழங்கினார்கள்.

நான்காவது முறையாக....





இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றதுவிழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.தலைவர் தனது உரையில்ஜமாத்தில் கூடியவிரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவார்கள் என்றார்.இளைஞர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அவர்களின் குறைகளை கழைய குழு அமைக்கப்படும் என்றார்.பெண்களுக்கு ஓட்டுரிமைகுறித்தும், வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை குறித்தும் கலந்துஅலோசிக்கப்படும் என்றார்.தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தலைவர், தான் தோல்வியடைய பல்வேறு சூழ்சிக்கள் தோன்றியது என்றும் அதில் ஒன்றுதான் பெண்கள் ஜமாத் என்ற பெயரில் வெளிவந்ததாகவும் இது எனது வளர்சியில் பொறாமைக்கொண்ட மாற்று சமுகத்தவர்களால் பின்னால் இருந்துக்கொண்டு இயக்கபட்டது என கூறினார்.அடுத்ததாக ஜமாத் வளர்சிக்கு பொதுமக்கள் தானாகவே முன்வந்து நிதி கொடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்ட தலைவர் இவ்வளவு பெரிய ஊரில் ஜமாத் சந்தா தொகை ரூபாய்,1400 மட்டும் வசூலாவது மிகவுக் குறைவானது எனவும் ஜமாத் வளர்சிக்கு முக்கிய பங்கு வெளிநாட்டு வாழ் நமதூர் முஸ்லிம் சகோதரர்களுடையது என்றும் இந்த அமைப்புக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.தலைவருக்கு, உலமாக்கள்,அமைப்புசார்ந்தவர்கள், தனி நபர்கள், பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்.திரு,ராமபாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் அவர்கள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஜமாத் தலைவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

எம்.எல்.ஏ நேரில் வாழ்த்து

ஜமா-அத் தலைவராக நான்காவது முறையாக பதவியேற்ற முஹம்மது யூனூஸ்க்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயம் நேரில் வந்து உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார். வாழ்த்து செய்தியாக அவர் குறிப்பிட்டதாவது. "முஹம்மது யூனூஸ் வெற்றி பெறுவார் என்று தான் முன்பே நம்பியதாகவும்,இன்னும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாகவும் ,ஜனநாயக முறையில் பெற்ற வெற்றியானது மிகப் பெரிய வெற்றி என்றும் கூறிய அவர் பரங்கிபேட்டை முஸ்லிம்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்."

விடிவு காலம் பிறக்குமா?



நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு. இந்த தெரு நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் ரோடுகள் மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது.இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் முதற்கொண்டு, ரோட்டில் நடந்து செல்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரோடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த ரோட்டில் குளம் ஒன்று உருவாகிவிடும். பரங்கிப்பேட்டையில் பல்வேறு சாலைகள் நன்றாக இருந்தாலும், இந்த சாலை மட்டும் அப்படியே தான் உள்ளது. என்றைக்குதான் இதற்கு விடிவு காலம் பிறக்குமோ?

நன்றி: http://www.portonovonews.blogspot.com

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...