செவ்வாய், 7 ஏப்ரல், 2009

சிதம்பரம் பகுதியில் 2 ஆயிரம் பேர் மனநல நோயால் பாதிப்பு - மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் தகவல்

சிதம்பரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனநல நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் கூறினார்.

விழிப்புணர்வு நாள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் உலக மனநல குறை விழிப்புணர்வு நாள் நடந்தது. மொழியியல் கழக துணை தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். முனைவர் லலிதா ராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழ்ச்சிக்கு மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக அளவில் 6 கோடியே 70 லட்சம் பேர் மன வளர்ச்சி குன்றிய நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மன நலம் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோய் இருப்பது அவர்களுக்கோ, அவர்களின் பெற்றோருக்கோ தெரிவதில்லை. இதனை போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பெறுவது அவசியம். மனநல மருத்துவர், மொழியியல் ஆய்வாளர், உளவியலாளர் ஆகிய 3 பேரும் ஒருங்கிணைந்து இதனை போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் நடராஜன் கூறினார்.

பயிற்சி அவசியம்

நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக மன நல மருத்துவப்பிரிவு தலைவர் காந்திபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், மனநல குறைபாட்டை நீக்க குழந்தை மருத்துவர், மனநல மருத்துவர் ஆகியோரின் பங்கு முக்கியம். இந்த நோய்க்கு மருந்தை விட விழிப்புணர்வு பயிற்சியே சிறப்பானது என்றார்.

இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சுதா நன்றி கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் 45 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை

கடலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மீன்வளம்

ஆழ்கடலில் மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதால், மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கப்படுவதை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.

அதன்படி தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி முடிய உள்ள 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

45 நாட்கள் தடை

இந்த தடை உத்தரவு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த தடை உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் கட்டுமரங்களும், 1,100 விசைப்படகுகளும், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குரிய 600 எஸ்.டி.பி. படகுகளும் வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

உதவித்தொகை

இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாது என்பதால் கடந்த ஆண்டில் அவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கியது.

ஆனால் இந்த ஆண்டில் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசால் வெளியிட முடியவில்லை. எனவே தேர்தலுக்கு பிறகே உதவித்தொகை வழங்குவது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் 11ம் தேதி கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி நடக்கிறது.

மாவட்ட 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 11ம் தேதி நடக்கிறது.

காலை 9 மணிக்கு 14 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும், 1 மணிக்கு 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும் நடக்கிறது.

தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் வெள்ளை சீருடை அணிந்து வர வேண்டும்.

14 வயதிற்குட்பட்டோர் 95ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகும், 16 வயதிற்குட்பட்டோர் 93ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

தேர்விற்கு வருவோர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது மாவட்டத்திற்குள் படிப்பவராகவோ இருக்க வேண்டும்.

இரண்டு போட்டோ, பிறப்பு சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

வீரர்கள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் செயலாளர் கூத்தரசன், இணை செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நடராஜன் முன்னிலையில் நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு... மாவட்ட கிரிக்கெட் சங்கம்-5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 9842309909, 9894116565, 9442521780 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

பரங்கிப்பேட்டை கடற்கரையில் இலங்கை அகதிகள் மீன் பிடிக்க தடை

பரங்கிப்பேட்டை கடற்கரையில் இலங்கை அகதிகள் மீன் பிடிக்க செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

இலங்கை அகதிகள் குள்ளஞ்சாவடி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில், கடலூர் ஆகிய இடங்களில் மீனவர்களுடன் சேர்ந்து படகில் கடலுக்கு சென்று தூண்டில் மூலம் மீன் பிடித்துவிட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பி சென்றுவிடுவார்கள். இதனால் மீனவர்களுக்கு அதிக லாபம் கிடைத்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்த கடற்புலிகளை 'கியூ' பிராஞ்ச் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் மற்றும் போலீசார் அன்னங்கோயில் பகுதிக்கு சென்று இலங்கை அகதிகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்தனர். இதனால் இலங்கை அகதிகள் முகாமிற்கு திரும்பி சென்றனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...