குறிப்பிட்ட சில பண முதலைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சிப்காட்தான் நம்மை போன்ற சமான்ய மக்களுக்கு சாபக்கேடாக வந்து வாய்த்துள்ளது. சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒரு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு. இது குறித்து வலைப்பூவில் ஏற்னகவே 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன? தகவல் வெளியிட்டுள்ளோம்.
ஒரு சராசரி மனிதனைவிட 2000 மடங்கு கேன்சர் ரிஸ்க் இருக்கிறதாம் இந்த பகுதி மக்களுக்கு. அது மட்டுமின்றி, சிப்காட் கழிவுகள் கடலுக்கு செல்வதால் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்ணுபவருக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதாம், அவர் எந்த நாட்டிலிருந்தாலும் சரி, இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில்.....!
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எத்தனை ஆய்வறிக்கைகள், புகார்கள் என்று குவிந்தவண்ணமிருந்தும் அவற்றையெல்லாம் பெயரளவிற்கு பரிசீலிக்கிறோம் என்று சொல்கிறதேயொழிய இதுவரை எந்த நடவடிக்கையும் முறைப்படி எடுக்கவில்லை.
தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இதர சுற்றுப்புறசூழல்/மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் என்று அடிக்கடி இந்த ஏரியாவில் உள்ள காற்று, மண், நீர் போன்றவற்றை ஆரயாச்சி செய்து கேன்சர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் (Toxic Chemicals) மிகுதியாக உள்ளது என்று ஆய்வறிக்கைகளை சமர்பித்தாலும்... இதுவரை நோ ஆக்ஷ்ன்தான்.
இதற்கிடையில் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் அரசியல் கட்சிகள் அடிக்கடி போராட்டங்கள் என்று பெயரளவிற்கு அறிவித்து பிறகு பேரங்களின் ஆதாயங்களைக் பெற்றவுடன் அட்ரஸே தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள். போரட்டங்களை அறிவிப்பதே இது போன்ற பேரங்களுக்கத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?பொதுமக்கள் நேரிடியாக களத்தில் இறங்கி போராடினால், நாங்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களே தவிர முறையான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. சிப்காட் தொழிற்பேட்டையால் அரசியல் கட்சிகள் ஆதாயமடைந்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பார்கள்?
ஆறுதலுக்காக ஒரு லிங்க் தருகிறேன். இதை க்ளிக் செய்து தமிழக முதல்வருக்கு நீங்கள் பெட்டிஷன் அனுப்பலாம். இது தமிழ்நாடு அரசின் செயலகத்தில் உள்ள சி.எம். செல்லிற்கு ஃபாக்ஸ் செய்தியாகப் (Online Fax Message) போய் சேரும்.
SEND AN ONLINE FAX URGING TAMIL NADU GOVERNMENT TO STOP POLLUTING CUDDALORE
http://petitions.aidindia.org/cuddalore/
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் கூட கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியரை இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர். தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி. ஆனாலும் என்ன நடவடிக்கைகள், எப்போது எடுக்கப்படும் என்று வியலுக்காக காத்திருப்புகள் தொடரத்தானே செய்கிறது.
தேசிய அளவில் எத்தனையோ கட்சிகளும், அமைப்புகளும் பெப்ஸி-கோக் நச்சுப் பொருளுக்காக போரடியதை அவர்கள் உட்பட நாமும் வசதியாக மறந்து நிற்கிறோமே!
இவ்வளவு தெரிந்தும் கூட இன்னமும் பரங்கிப்பேட்டை மக்கள் தன்னுடைய வாரிசுகளுக்கு சிறந்த கல்வி(?) புகட்டச் செல்கிறோம் என்கிற பெயரில் கடலூருக்கு தனிக்குடித்தனம் புகுவிழாக்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கேன்சர் ஏரியா... உள்ள வராதே! என்று ஒரு போர்டு வைக்கனும் என்று தோனுகிறது எனக்கு... கடலூர் எல்லையில்.
வேறு ஏதாவது மாற்று வழி தேவை இவற்றை தடுப்பதற்கு. அறிவுப்பூர்வமாக யோசித்து உங்களின் கருத்துகளை இங்கு பதிவுடுங்கள். அலசுவோம்.... ஆலோசனை செய்வோம்!..... தொடரும்....
குறிப்பு: இந்த தகவல்கள் எல்லாம் எனது கற்பனையல்ல. இது குறித்து முழு விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை க்ளிக்கவும்.
http://mypno.blogspot.com/2008/04/25.html
http://www.alternet.org/healthwellness/85630/?page=entire
http://cuddaloreonline.blogspot.com/2008/05/toxic-chemicals-in-sipcot-cuddalore-and.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
ஞாயிறு, 25 மே, 2008
கேன்சர் ஏரியா... உள்ள வராதே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...