புதன், 6 மே, 2009

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் வேலை வாய்ப்புப் பதிவு ஏற்பாடு!

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியான உடன் கல்வித்தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் போதிய இடவசதி இல்லாத நிலையில் திருமண மண்டபம், பள்ளிகளில் சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு வந்தது.

நெரிசல், காலதாமதத்தை தவிர்க்க இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வேலை வாய்ப்பு பதிவிற்கான படிவத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பெற்று வர வேண்டும்.

படிவங்களை மாணவர்களுக்கு கொடுத்து, பூர்த்தி செய்த படிவத்துடன் அவர்களது ரேஷன் கார்டு நகல், மார்க் சீட் நகலை இணைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, பதிவு எண் அட்டைகள் வழங்கப்பட்டதும் அவற்றை உரிய மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக தனியாக பதிவேடு துவங்கி பராமரிக்க வேண்டும். இந்த பணிகளை செய்ய 10ம் வகுப்புக்கு ஒருவர், 12ம் வகுப்புக்கு ஒருவர் என இரண்டு பொறுப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோர் ஓட்டளிக்க புது ஏற்பாடு!

லோக்சபா தேர்தலில் பார்வையற்றோர் மின்னணு எந்திரத்தில் நேரடியாக ஓட்டுப்பதிவு செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உதவியுடன் ஓட்டுப்பதிவு செய்தனர்.

வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு மின்னணு எந்திரத்தில் தடவிப்பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் பிரைலி முறையில் வேட்பாளர்களின் பெயரின் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஸ்டிகர் ஓட்டப்பட உள்ளது.

இதன் மூலம் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி அலுவலரின் உதவியின்றி தாம் விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தி ஓட்டுப்பதிவு செய்யலாம்.

அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்! 58 மையங்களில் கிடைக்கும்!!

என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் 58 மையங்களில் வினியோகிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 354 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பல்கலைக்கழக கல்லூரிகள் 11, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 10, சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 333, சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 135 கல்லூரிகளும், கோவை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 103 கல்லூரிகளும், திருச்சி அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 63 கல்லூரிகளும், நெல்லை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 53 கல்லூரிகளும் உள்ளன.

இப்போதைய நிலவரப்படி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 84 ஆயிரத்து 555. அவற்றில் சுயநிதி சிறுபான்மை கல்லூரிகளில் 18 ஆயிரத்து 684 இடங்களும், சிறுபான்மை அல்லாத சுயநிதி கல்லூரிகளில் 57 ஆயிரத்து 307 இடங்களும் உள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1544 இடங்களும், அரசு கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 7 ஆயிரத்து 20 இடங்களும் உள்ளன. புதிதாக இந்த வருடம் 144 கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்.

மேற்கண்ட அனைத்து அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ., பி.டெக் சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்ப மனுக்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. விண்ணப்ப படிவங்கள் வினியோகம் இன்று (புதன்கிழமை) காலை 9-30 மணிக்கு தொடங்குகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்குவதை நான் தொடங்கி வைக்கிறேன்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள மே மாதம் 30-ந்தேதி கடைசி நாள். காலை 9-30 முதல் மாலை 5-30 மணிவரை விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பம் ரூ.250.

நேரில் விண்ணப்பங்களை பெறாதவர்கள் http://www.annauniv.edu/tnea2009/ என்ற முகவரியில் லோடு செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அதை நிரப்பி புகைப்படம் ஒட்டி விண்ணப்ப கட்டண தொகைக்கு டிமாண்ட் டிராப்ட்டை இயக்குனர், சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை, என்ற பெயரில் எடுத்து அதை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விளையாட்டு இட ஒதுக்கீட்டில் கவுன்சிலிங்கிற்கு வர விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக 100 ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. அதுமட்டுமல்ல தேர்தலையொட்டி 12, 13, மற்றும் 16 தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் வந்து சேர மே 31-ந்தேதி கடைசி நாள்.

பி.இ. விண்ணப்பிக்க மாணவர்கள் குறைந்த பட்சம் பொதுப்பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 55 சதவீத மார்க்கும், பிற்பட்டோர் 50 சதவீத மார்க்கும், மிகவும் பிற்பட்டோர் 45 சதவீத மார்க்கும் பெறவேண்டும். ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தேர்ச்சி பெற்றால் போதும்.

பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை குறித்து மேலும் விவரங்கள் அறிய 044-22203616, 22203617, 22203618, 22203619, ஆகிய தொலைபேசிகளில் காலை 9 முதல் மாலை 6 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்களுக்கு ரேங்க் பட்டியல் ஜுன் 20-ந்தேதிக்குள் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் ஜுன் இறுதியில் அல்லது ஜுலை முதல் வாரத்தில் தொடங்கும். அதாவது மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பிறகுதான் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கும்.

புதிய படிப்புகளாக எம்.பி.ஏ. ஆஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், எம்.இ. விண்வெளி தொழில் நுட்பம், எம்.ஆர்க். நவீன கட்டிடக்கலை ஆகிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்கலை., விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப்படிப்பு விண்ணப்ப படிவம் கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பட்டப்படிப்பு முதல் ஆண்டு, பி.ஈ., பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் இன்று (6ம் தேதி) துவங்குகிறது.

பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசு பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்த மாணவர்கள் அதற்குண்டான ஜெராக்ஸ் சான்றிதழை சமர்பித்து சலுகை கட்டணமாக 250 ரூபாய் மட்டும் நேரில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறலாம்.

கடலூர் வண்ணாரப்பாளையம் கே.கே. நகரில் அமைந்துள்ள பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் இன்று (6ம் தேதி) முதல் பெற்று கொள்ளலாம்.

இத்தகவலை பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் வி.முத்து தெரிவித்துள்ளார்.

Source: தினமலர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...