புதன், 9 மார்ச், 2011

தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்

பரங்கிப்பேட்டை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கள் கட்சிகளின் கூட்டம் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. காவல்துறை உதவி ஆயவாளர் சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பா.ம.க., பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்துக்கொணடனர்.
இதில் தேர்தல் விதிமுறைகள் விளக்கப்பட்டது. தேர்தல் விளம்பரம் செய்வோர் சொந்த வீடாக இருந்தாலும் முறைப்படி அனுமதி பெறவேண்டும் எனவும், திருமண பேனர்களில் அரசியல் தலைவர்கள் பெயர் கூடாது எனவும், அரசு அலுவலகங்களில் விளம்பரம் கூடாது எனவும் தற்போது வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனே நீக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
மேலும் ஏற்கனவே உள்ள கொடி கம்பங்களில் மட்டுமே கொடிகளை ஏற்றவேண்டும் புதிதாக கம்பங்கள் நடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பரங்கிப்பேட்டையில் சுவர் விளம்பரங்கள் -டிஜிட்டல் பேனர்களை அகற்றம் செய்து தேர்தல் கண்காணிப்பு குழு வினர் நடவடிக்கை மேற் கொண் டனர்.

இவர்கள் நேற்று பரங்கிப்பேட்டை அகரம், பெரிய மதகு, போலீஸ் நிலையம், சஞ்சீவிராயன் கோவில் தெரு, பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், சின்னக்கடை உள்பட பேரூராட்சி பகுதி களில் ஊழியர்களுடன் சுவர் விளம்பரங்களை அழித் தனர்.மேலும் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், கட்சி கொடிகள், டிஜிட்டல் பேனர் களை அகற்றினர்.தொடர்ந்து கிராமங்களை கண்காணித்து வருகின்றனர்.

விஷ வாயு கசிவு - கண் துடைப்பு ஆய்வு குழு?

கடந்த திங்கள் இரவு கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள சாஷன் கெமிக்கல் ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால், விஷ வாயு கசிந்ததை தொடர்ந்து 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதை முன்பு செய்தியாக வெளியிட்டிருந்தோம். விஷ வாயு கசிந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆலை தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், விஷ வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தர வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இதே சாஷன் கெமிக்கல்ஸ் உட்பட சில ஆலைகளில் சோதனை நடத்திச் சென்றார். இன்று வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது விடை தெரியாத கேள்விகள். அன்று சோதனை செய்ய வந்த கனிமொழி இன்று ராஜ மரியாதையுடன் சோதனைக்கு ஆளாக இருக்கிறார் என்பது தனிக் கதை. அப்போது நடந்த ஆய்வுகளுக்கே விடை தெரியாத நிலையில் தமிழக அரசால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவும் கண் துடைப்பு ஆய்வு குழு என்றே எண்ணத் தோன்றுகிறது.தேர்தல் நெருங்கி விட்ட இந்த வேளையில் பொது நல அமைப்புகளும், சமூக ஆர்வலகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் பல்வேறு வகையான மாசுபாட்டால் சிக்கி தவிக்கும் கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களுக்கு ஓரளாவாவது நிம்மதி கிடைக்குமே செய்வார்களா?

முன்பே சொன்ன MYPNO!

தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு உடன்பாடு குறித்து நேற்று பகல் 12.30 மணிக்கே 'கிடைத்தது 63' என்கிற செய்தியை வெளியிட்டது. ஆனால் பிரபல மீடியாக்கள் அனைத்தும் மாலை 6 மணிக்குப் பிறக தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் காங்கிரஸூக்கு 63 தொகுதிகள் என்று நாம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தியது.

நாம் முன்பே சொன்ன விசயத்தை ஆச்சரியப்பட்டு மதுரையிலிருந்து வாகசர் ஒருவர் எழுதிய கருத்தினை அனைத்து வாசகர்களின் பார்வைக்கு...

"இந்தச் செய்தியை மதியம் இண்ட்லியில் நீங்கள் இணைத்தபோதே பார்த்தேன். விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட செய்தியென்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை 7 மணிக்கு பிறகே பிரபல மீடியாக்கள் அனைத்தும் உங்களின் செய்தியை ஊர்ஜிதம் செய்து 63 தொகுதிகள் என்று வெளியிட்டது. அதன்பிறகு மீண்டும் இண்ட்லியிலிருந்து இந்த சுட்டியை தேடி பிடித்து மறுபடியும் படித்தேன். சாதாரண ஒரு வலைப்பூ எப்படி முன்கூட்டியே இவ்வளவு தெளிவாக சொல்லமுடிந்தது? அப்படியே மற்ற பழைய புதிய பதிவுகளையும் பார்த்தேன். நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். " (மதுரை மனோ)

சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்குசீட் கிடைக்குமா?

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடப் போவது உறுதி என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர். புவனகிரி தொகுதியை அ.தி.மு.க., பெரும்பாலும் கூட்டணிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் தானே போட்டியிட்டு வருகிறது. தற்போது இத்தொகுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வாக செல்வி ராமஜெயம் உள்ளார். கடும் போட்டி இருந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற்றார். எதிர்கட்சி எம்.எல்.ஏ., வாக இருந்தாலும் தொகுதி வளர்ச்சி பணிகள் ஓரளவு செய்துள்ளதால் மக்களிடம் அவப்பெயர் இல்லை.

இந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடவும், அவரின் சொந்த ஊரான பரங்கிப்பேட்டை தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் வருவதால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார். மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன், முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்சியினர் சிதம்பரம், புவனகிரியில் போட்டியிட மனு கொடுத்துள்ளனர். இதில் ஏதாவது ஒரு தொகுதி செல்வி ராமஜெயத்திற்கு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நன்றி: தினமல
ர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...