செவ்வாய், 7 ஜூலை, 2009

பரங்கிப்பேட்டை அருகே கோஷ்டி மோதல் - 10 பேர் கைது

பரங்கிப்பேட்டை அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள கீழ் பூவாணிக்குப்பம் கிராமத்தில் தேசபக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டு ஆடி திருவிழா கொண்டாடுவது குறித்து நேற்று முன்தினம் ஊரில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் திருவிழா கொடுப்பதற்கு வீட்டுக்கு ரூ.300 வசூல் செய்ய வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.

மேலும் பணம் போதுமானதாக இல்லையென்றால், அதே ஊரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் (வயது 32) செலவிடுவார் என்று கூறப்பட்டது.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ரகு என்பவர், ஜெயக்குமார் தலைமையில் திருவிழா நடத்துவதா என்று கூறி திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஜெயக்குமார், ரகுவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

வாய்த் தகராறு முற்றி கோஷ்டி மோதலாக மாறியது.

இதில் ரகு ஒரு கோஷ்டியாகவும், ஜெயக்குமார் ஒரு கோஷ்டியாகவும் கட்டை, இரும்புபைப் போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர்.

இது பற்றி புதுச்சத்திரம் போலீசில் ரகு தரப்பை சேர்ந்த பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தராஜ் (26), தம்பிராஜா (23), பாபு (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரகு தரப்பை சேர்ந்த பரந்தாமன் (21), முத்தையன் (55), பாவாடை (40), பாஸ்கர் (35), பாலு மனைவி கலா (35), அல்லிமுத்து (35), லட்சுமணன் (31) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை - 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா, மகேஷ்வரி மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பரங்கிப்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீதர் (வயது 37), சாலக்கார தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் கிருஷ்ண மூர்த்தி (35), பீட்டர் தெருவை சேர்ந்த முகமது சுல்தான் மகன் முஜிப் (32), பரங்கிப்பேட்டை சின்னக்கடையை சேர்ந்த உதுமான் மகன் பரகத் அலி (31) ஆகிய 4 பேரும் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்து வந்தனர்.

அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த பெட்ரோல், டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் சிதம்பரத்தில் லைசன்ஸ், பெர்மிட் இல்லாமலும், ஒரு வழிப்பாதை வழியாக சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...