இதுகுறித்து, மீனவர் ஏழுமலை கூறுகையில், "இன்று காலை 60 பேர் சூறை மீன் பிடிக்க சென்றோம். பரங்கிப்பேட்டை லைட் அவுஸ் வடக்கு புறம் சுறுக்கு வலை விரித்தோம். அப்போது, 17 அடி நீளமும் 6 அடி அகலமும் மூன்று டன் எடையும் கொண்ட "கோமரா சுறா' வகை மீன் சிக்கியது. மிகவும் போராடி கயிறு கட்டி 4 மணி நேரமாக கடலில் இழுத்து வந்தோம். இதனால், வலை சிறிது சேதமானது. சாதா வலையை அறுத்து தப்பிச் சென்று விடும். சுறுக்கு வலை என்பதால் தப்பிக்க முடியாமல் சிக்கியது. இந்த வகை மீன் கருவாடு அல்லது கோழித் தீவனத்திற்கு தான் பயன்படும். இதை 6,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்' என்றார்.
Source: Dinamalar