பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 21 ஜூலை, 2013 0 கருத்துரைகள்!

சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் நேற்று மாலை சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசல் கூட்ட அரங்கில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, ஹமீது கவுஸ் இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ்.முஸ்தபா கமால் அனைவர்களையும் வரவேற்றார். .

பென்கூலன் பள்ளியின் இமாம் அப்துல் கையூம் பாகவி தனது உரையில், “சுயநலத்தை அடியோடு வேரறுத்து, உளத்தூய்மையுடன்  செய்யப்படும் பணிகள் மட்டுமே வெற்றி பெறும், சமுதாய நலன், ஊர் நலனுக்காக இதுப்போன்ற கட்டமைப்புகள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “ ஒருங்கிணைப்பு என்பது உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது அல்ல, உள்ளங்களை ஒருங்கிணைப்பதே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற அமர்வில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.ஜியாவுதீன் அஹமது, கடந்த 2002 ஆ,ம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வமைப்பின் கல்வி, மருத்துவம், குர்ஆன் மக்தப் உள்ளிட்ட செயல்பாடுகளை சுருக்கமாக விவரித்தார்.

இறுதியில் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஹெச்.தாரிக் ஹுஸைன் தலைமையில், பொருளாளர் எம்.ஜி.கமாலுத்தீன், எஸ்.ஜியாவுதின் அஹமது, கே.அன்வர் ஹஸன், ஹெச்.அப்துஸ் ஸலாம், ஜி.மரக்கச்சி மரைக்காயர், யூசுப் ரியாஸ், என்.ஹபீபுல்லாஹ், ஐ.ஹபீபுல்லாஹ், எம்.முஹம்மது யாஸிர்,  ஹாஜா பக்ருத்தீன், பி.நூர் அலி அப்பாஸ், ஐ.தாரிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 70 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

படங்கள்: ஹெச்.முனவர் ஹுஸைன்
மேலும் வாசிக்க>>>> "சிங்கப்பூரில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!"

0 கருத்துரைகள்!


சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் பரங்கிப்பேட்டை வாழ் சகோதரர்களுக்கு மத்தியிலும் நிதாகத் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களிலும் நினைவு கொண்டிருக்கும் சமூக  ஆர்வலரான வாசு சிதம்பரம், டான்பா எனும் சமூகநல அமைப்பின் சமூகநல செயலாளராக உள்ளார். தனது ஊர் பெயரையே தனது பெயரில் பாதியாக கொண்டிருக்கும் இவர் பரங்கிப்பேட்டையின் மருமகன்.  பரங்கிப்பேட்டை பாலன் (அச்சகம்) மகளை மணம் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாய் தனது சமூக சேவைகளை பரங்கிப்பேட்டை மக்களோடு இணைந்தும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

கல்வி, வெளிநாட்டுவாழ் இந்தியர் நலம் முல் நிதாகத் சட்டத்தில் சிக்கியவர்களை மீட்டெடுப்பது வரை பல்வேறு நலச் சேவைகளை ஆற்றிவரும் இவரை MYPNO சந்தித்து பேட்டி கண்டுள்ளது. இனி பேட்டியிளிருந்து....

டான்பா.அமைப்பைப் பற்றி கூறுங்களேன்...?

டான்பா (Tamilnadu NRI & Parents Association) என்கிற சமூகநல அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக இங்கு (சவூதி அரேபியா கிழக்கு பிராந்தியத்தில்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதில் என்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சமூகநலப் பணியினை மேற்கொண்டு வருகிறேன். இதில் தமிழ் சமுதாய மக்களுக்காக தலைவர் பாலமுரளி அவர்களின் வழிகாட்டலோடு பல்வேறு உதவிகளை டான்பா மூலம் செய்து வருகிறோம். இதில் மிக முக்கியமாக பன்னாட்டு இந்திய பள்ளியின் நிர்வாகக்குழு தேர்தலின்போது, பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக தமிழரான கே.எம். திருநாவுக்கரசு அவர்களை தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தோம். இவை தவிர டான்பா அமைப்பு இங்குள்ள பல்வேறு தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்களை ஒருங்கிணைத்து பல பொதுநல உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம்.

டான்பாவில் உங்களது பங்களிப்பு என்ன?

டான்பா அமைப்பில் நான் சமூகநல செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாய் அமைப்பின் அனைத்து சமூக சேவை பணிகளை செய்து வருகிறேன். நான் இங்கு 20 ஆண்டுகளாக பணியில் (தொழிலில்) இருந்து வந்தாலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் " நாஸ் வொக்கம்" மூலமாக சமூக சேவைகளில் ஈடுபடும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக டான்பா அமைப்பில் இணைந்து தமிழ் சமூக மக்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய மக்களுக்கும் பள்ளி, கல்வி, மருத்துவம், மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர் நலம் குறித்து பல்வேறு சேவைகளை செய்து வருகின்றேன். தர்ஹீலுடன் எங்கள் பணிகள் முடிந்துவிடவில்லை. இங்கே இறப்பெய்கின்ற இந்தியர்களின் உடலை அவர்களின் குடும்பத்தினர் விருப்பத்திற்கேற்ப இங்கேயே அடக்கம் செய்யவோ அல்லது உடலை தாயகத்திற்கு அனுப்பவோ ஏற்பாடு செய்கின்றோம். சவூதி சிறைகள், பெண்கள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அவர்கிளன் தேவைகளை முடித்துத் தருகிறோம். பயணச்சீட்டு இல்லாமல் தவிப்பவாகளுக்கு இங்குள்ள சமுக மற்றும் சமுதாய அமைப்புகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றோம்.

யார் இந்த "நாஸ் வொக்கம்"?

இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதரர். சுமார் 17 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நவோதயா என்கிற அமைப்பில் சிறப்புநிலை உறுப்பினராக (Executive Member)ஆக உள்ளார். இவர் அறிவிக்கப்படாத இந்திய தூதரகத்தின் ஒரு முகவர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் செய்த செய்து வரும் சேவைகளினால் ஈர்க்கப்பட்டதின் விளைவுதான் இன்று டான்பாவில் எனது பங்களிப்பு.

தமிழ் அமைப்புகளை ஒன்றினைக்கும் டான்பாவின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

சவூதி அரசின் நிகாதத் சட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு சகோதரர்கள் நலம் உள்ளிட்ட எத்தனையோ சேவைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வந்தாலும், முன்பே நான் சொன்னது போன்று, 17000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், 700 ஆசிரியர்களை அடக்கிய பன்னாட்டு இந்திய பள்ளியில் நடைப்பெற்ற நிர்வாக தேர்தலின் போது ஒரு தமிழரை முன்னிறுத்தி அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறசெய்தோம். இதில் நிர்வாகக் குழு தலைவராக (chairperson) தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் கே.எம். திருநாவுக்கரசு தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்துவிட்டு, அவரது செம்மையான பணியினால் மீண்டும் இரண்டாவது முறையும் அவரே தொடர்கின்றார். நிச்சயமாக இது டான்பாவின் சாதனை என்றே சொல்லலாம்.

அப்படியென்றால் இந்திய தூதரக அலுவலகத்துடன் டான்பா அமைப்பிற்கு நல்ல உறவு இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. நாங்கள் மேற்கொள்ளும் சமூகநல உதவிகளினால் எங்களுக்கு இங்குள்ள அரசு அலுவலகங்களில் நல்ல மரியாதையும் இணக்கமும் உள்ளது. எனவேதான், வாரமொருமுறை ரியாத்திலிருந்து வரும் தூதர அதிகாரிகள் கூட எங்களுடன் இணைந்துதான் இங்குள்ள அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுகின்றனர். எங்களது பணிகளை அவர்கள் அறிந்திருப்பதால் தான், அதற்கான அங்கீகார கடிதங்களை (Letter of Authorization) எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

டான்பாவுடன் இணைந்து செயல்படும் எத்துனையோ அமைப்புகள் இருந்தாலும் பரங்கிப்பேட்டடை - கிழக்கு மாகாணம் அமைப்புடன் ஒரு நல்லுறவு மேற்கொள்வதில் அதனைப் பற்றிய தங்களது கருத்து?

கடந்த3-4 ஆண்டுகளாய் இந்த அமைப்பை பற்றி நான் அறிந்திருந்தாலும் எனக்கு எவ்வித தொடர்பும் இவர்களுடன் இருந்ததில்லை. இது எனக்கு மிகவும் ஆதங்கமாகவே இருந்து வந்தது. எத்தனையோ நல்ல விசயங்களை நாம் செய்து வருகிறோம். ஆனால் நமதூர் அமைப்பான இந்த பரங்கிப்பேட்டை வாழ் சவூதி-கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்பிற்கு டான்பாவின் சேவைகள் சரிவர போய்ச் சேரவில்லையே என்று அடிக்கடி நினைப்பதுண்டு. தமிழ் சமூகத்திற்கென்று ஒரு மீடியா இல்லாததினால் டான்பாவின் செயல்பாடுகள் இன்னும் முழுமையாக சென்றடயவில்லையே என்று நினனத்த சமயத்தில் தான், நமது பேரூராட்சித் தலைவர் முனைவர் முஹம்மது யூனுஸ் தம்மாமிற்கு வருகை தந்தார். அதுசமயம் சமூக சேவகர் நாஸ் வக்கமுடன் சென்று விமான நிலையத்திற்கு சென்ற போதுதான் கிழக்கு மாகாண சங்க நிர்வாகிகளான வஜ்ஹுத்தீன், அன்ஸாரி, காஜா முயினுத்தீன், கலிமுல்லா, நஜீர் உபைதுல்லா, ரஹமத்துல்லா போன்றோர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இந்த வரவேற்பும் அதனை தொடர்ந்து நடந்தேறிய நிகழ்ச்சிகள் தங்களின் வலைத்தளம் (MYPNO) வழியாக செய்திகளானபோது எங்கள் அமைப்பை இன்னும் சென்றடைய செய்தது. அதற்காக முனைவர் யூனுஸ் அவர்களுக்கும் தங்களுக்கும் (MYPNO) நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறகு, அல்கோபார் நகர மேயருடன் நடந்தேறிய சந்திப்பின் போது சகோதரர் நவ்ஸாத் எனக்கு அறிமுகமானார். இவ்வாறு எனக்கு இந்த பரங்கிப்பேட்டை கிழக்கு மாகாண சங்க நிர்வாகிகளுடன் நல்லுறவு ஏற்பட்டது. அதன்பிறகு இவர்கள் அனைவரும் எங்களுக்கு எல்லாவகையிலும் நல்ல ஒத்துழைப்பை தந்து வருகின்றனர். சமீபத்தில்கூட இவர்களுடன் இணைந்துதான் தர்ஹீல் அலுவலகத்தில் நாட்கணக்கில் நின்று கொண்டிருக்கும் மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கொடுத்தோம். எங்களுக்கு இவர்கள் எல்லாவகையிலும் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றார்கள்.

மலையாளிகளுக்கு என்று சவூதி அரேபியாவில் கிட்டதட்ட 5 ஊடகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நீங்களே ஆதங்கப்படும் தமிழ் சமூகத்திற்கு ஒரு ஊடகத்தை இங்கு கொண்டுவர உங்கள் அமைப்பு  ஏன் முயற்சிக்கவில்லை?

இதுபற்றி எல்லாக் கூட்டங்களில் தொடர்ந்து ஆலோசனை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒரு தமிழ் ஊடகத்தை இங்கு நிறுவுவது என்பது எங்களின் குறைந்தபட்ச திட்டத்திலேயே உள்ளது. வேலைப்பளு காரணமாக அது தள்ளிப்போய் கொண்டிருக்கின்றது. குறைந்தபட்டசமாக முதலில் ஒரு செய்தி வலைத்தளத்தையாவது உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு தங்களின் MYPNO  தளத்தினைக்கூட எங்களது நிர்வாகிகளிடம் முன்னுதாரணமாக கூறியிருக்கிறேன். எனவே, கூடியவிரைவில் அதற்கான முழுமுயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம்.

இங்கு எத்துனையோ தமிழ் அமைப்புகள் செயல்படுகிறது. பொதுவான விசயங்களில் அவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவா?

இங்கு ஊர் நல அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், சமூக-சமுதாய மற்றும் பண்பாட்டு அமைப்புகள் என்று எத்தனையோ செயல்பட்டாலும், பொது விசயங்களில் எங்களிடம் ஒருங்கிணைந்துதான் செயல்படுகின்றன. இதில் பாரபட்சம் பாராமல் எல்லோரும் ஒத்துழைப்பை எங்களுக்கு தருகின்றனர்.

டான்பாவின் சிறப்புமிகு பணியாக சவூதி நிகாதத் சட்டத்தில் பாதிக்கப்ட்டுள்ள இந்தியர்களுக்கு உதவிகளை செய்து வருகிறீர்கள். இதில் தமிழர்களுக்கு என்று தனிப்பட்ட முன்னுரிமையை தருகின்றீர்களா?

தமிழர்களுக்கு தனிகவனம் செலுத்தி அவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம். சவூதி கிழக்கு பிராந்தியத்தில் கிடைக்கப்பெற்ற 8000 விண்ணப்பங்களில் சுமார் 1500 விண்ணப்பங்கள் தமிழர்களுடையது. இதில் சுமார் 300 பேர்கள் இங்கிருந்து நல்ல முறையில் வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ளவர்களுக்கு கைரேகை பணிகள் முடிவடைந்து விசா அடிக்கும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக நாங்கள் காலை 8 மணிக்கு சென்று இரவு 10 மணிக்குத்தான் திரும்புகிறோம்.

தற்போது நிகாதத் விசயத்தில் சவூதி அரசு 4 மாத கால அவகாசம் அளித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் இதில் பாதிக்கப்ட்ட அனைவரும் முறையாக வெளியேறிவிடுவார்களா அல்லது விசாவினை  முறைப்படுத்திக் கொள்வார்களா?

இதை செய்தே ஆகனும் இல்லையெனில் இதன் பின்விளைவுகளினால் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படலாம். எனவே இந்த காலக்கெடுவை இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதல் காலக்கெடுவுக்கு முன்பு நடந்த ரெய்டின்போது நிறையபேர் பிடிபட்டு சிறையில் அடைப்பட்டனர். அப்போது சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு சில மரணங்கள் கூட நிகழ்ந்தன. அதில் ஒரு மலையாளி உட்பட மூவருக்கு நான் தனிப்பட்ட வகையில் ஜாமீன் எடுத்திருந்தேன். எனவே காலக்கெடுவுக்கு பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுற்கு முன்னரே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் இரண்டாவது முறையாக கால அவசகாசம் கொடுத்துள்ள சவூதி மன்னருக்கு நாம் நன்றி கூற கடமைபட்டுள்ளோம். அதேபோன்று, நம் இந்திய தூதர் ஹமீத் அலி ராவ், துணை தூதர் சிபிராஜ் ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். ஏனெனில், நிகாதத் குறித்து சவூதி அரசிடம் முதன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது நம்  இந்திய அரசுதான்.

கஃபாலத் என்று சொல்லப்படும் இது போன்ற விசாவில் இனி வருபவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

கஃபாலத் என்று ஒரு விசாவே முதலில் கிடையாது. இங்குள்ள சில அரபியர்களிடம் (கஃபில்) பணம் கொடுத்து முறையற்ற வகையில் பெறப்படும் இந்த விசா ஆபத்தானது. எனவே, முறையான விசாக்களில் மட்டுமே வரவேண்டும். புதிதாக வேலைக்கு வருபவர்கள் சரியான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

தங்களுக்கு தெரிந்த வகையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பற்றி..?

நான் பரங்கிப்பேட்டையின் மருமகன் என்பதினால் ஏற்கனவே இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்து பிற சமுதாய மக்களுக்கும்  சேர்த்து அவசரகால உதவிகள் மற்றும் கல்விநிதி உதவிகள் செய்து வருவதை அறிந்திருக்கிறேன். நமது முனைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் தம்மாம் வருகைக்கு பிறகு ஜமாஅத் பற்றி இன்னும் பல  அறிந்திடாத சேவைகளை தெரிந்துக் கொண்டேன். அதில் குறிப்பாக வரதட்சனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றி ஊரில் முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சனையை ஒழித்தது மிகவும் பாரட்டத்தக்கது. இதை  மற்ற முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத அமைப்புகளும் பின்பற்ற வேண்டும். இது நமது நாட்டுக்கு பயன் விளைவிக்கும் முன்மாதிரியான விசயம்.


சந்திப்பு: MGF
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத்தின் வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை நாட்டுக்கே முன்மாதிரியான விசயம்: வாசு சிதம்பரம்"

0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  இந்தாண்டு நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 60 நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "ஃபித்ரா ஆலோசனைக் கூட்டம்!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234