திங்கள், 7 மார்ச், 2011

சாணார முடுக்குத் தெருவில் திடீர் தீ!

பரங்கிப்பேட்டை: சாணாரமுடுக்குத் தெரு யாதவாள் தெரு சந்திப்பில் உள்ள ஒரு கூரைமீது தீடீர் என தீப்பற்றி எரிந்தது. மின் கசிவினால் என்று கருதப்பட்ட இத்தீ பரவிய உடனே இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் வந்து மிச்சம் மீதியிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மூனா ஆஸ்திரேலியன் பள்ளி விளையாட்டு விழா

பரங்கிப்பேட்டை: மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் பிரதீப் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் தலைமை ஏற்றார்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் ரஹ்மான், ஆடிட்டர் இல்யாஸ், முஸ்தாக் அலி ஆகியோர் பங்குப் பெற்றனர். சிறப்பு விருந்தினராக காவல் துறை ஆய்வாளர் புகழேந்தி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாணவ-மாணவிகளுக்காக பரிசு மற்றும் சான்றிதழ்களை தடகள பயிற்சியாளர் பரமசிவம் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...