தமிழக சட்டப்பேரவை தேர்தலில் "பரங்கிப்பேட்டை ஹல்வா" முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல்வருக்கு முன்னாள் M.LA. சிவலோகம் மகன்கள் சண்முகம் - கோவிந்தராஜ் ஆகியோர் ஹல்வா வழங்கினார்கள். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், தனது நண்பருமான ஹஸன் முஹம்மது ஜின்னா-வை அவரது இல்லத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழக பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, "பரங்கிப்பேட்டை ஹல்வா" வழங்கினார். தொடர்ந்து கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா-வுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டார்.
திங்கள், 28 மார்ச், 2011
இறப்புச் செய்தி
ஆரிய நாட்டு நடுத்தெருவில் மர்ஹும் முஹம்மது கான் அவர்களின் மகனாரும், மர்ஹும் நூர்கான் அவர்களின் மருமகனாரும், மர்ஹும் யாகூப் கான், மர்ஹும் ஆரிப் கான் ஆகியோரின் மச்சானும், மஹ்புப்கான், சான்பாசா அவர்களின் தகப்பனாருமான லத்தீப் கான் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 6-30 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!
பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.
அரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
அரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்!
பரங்கிப்பேட்டை: சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டு பதிவு செய்வது என்கிற செயல்முறை விளக்கம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.
சின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.
சின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.
மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.
பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்., கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை.
இதனால் இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் தேர்தல் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., தலைவர் செய்யது அலி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் மற்றும் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
Source: Dinamalar
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...