செவ்வாய், 14 ஜூன், 2011

இறப்புச் செய்தி

ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹும் ரஹ்மதுல்லாஹ்ஷா அவர்களின் மகளாரும், செய்யது அஹமது அவர்களின் மனைவியும், ஹாஜா மக்தூம், முஹம்மது காசிம், உமர் ஆகியோர்களின் சகோதரியும், சிராஜ் அவர்களின் தாயாருமாகிய உம்முசல்மா அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை புதன்கிழமை (15-06-2011) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் 1-ம் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்துக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், நிபுணர் குழு அறிக்கை மீது ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை 2,3,4,5, 7,8,9,10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டாம். தீர்ப்புக்கு பின் பாடம் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.

எம்.எல் ஏ-வுக்கு பிடி-வாரண்ட்



1997 - ஆம் ஆண்டு கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பண வசூல் தொடர்பாக முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்பதால் கடந்த 2001 -ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் த.மு.மு.க மாநிலத் தலைவருமான ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் நல்லார் முஹம்மது,காசிம்,செய்யது நிஷார் அஹ்மது ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


source:dinakaran

ஹஜ் யாத்ரிகர்களுக்கு மேலும் சலுகைகள்

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள் கிழமை அறிவித்தார்.


எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.


தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள்.


பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.


யாத்திரைக்கு சாமான்கள் எடுத்துச் செல்லும் நடைமுறை எளிதாக்கப்படும்.


இந்தியாவில் 21 ஊர்களிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விமானங்களில் நேரடியாகச் செல்லலாம்.


ஹஜ் பயணத்தின்போது இந்திய யாத்ரீகர்கள் தங்க 1,25,000 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படும்.


ஜித்தாவில் இந்தியத் தூதரகத்தில் இந்திய யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக தனிப்பிரிவு செயல்படும்.


கடந்த ஆண்டு 1,71,671 பேர் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


இத்தகவல்களை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நிருபர்களிடம் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...