பரங்கிப்பேட்டையில் இன்று (11/12/08) வெள்ள நிவாரண நிதி வழங்க பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.
வியாழன், 11 டிசம்பர், 2008
இறப்புச் செய்தி
ஜுன்னத் மியான் தெரு, ஹம்மாது, ஆதம் மாலிக் இவர்களின் மூத்த சகோதரர் மற்றும் சாதலி, உஸ்மான் ஆகியோரின் தந்தையுமான (ஆதம் ஸ்டோர், பெரிய கடை தெரு) கஜ்ஜாலி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்..
தகவல் : அப்பாஸ் இப்னு ஜலாலுதீன்
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்..
தகவல் : அப்பாஸ் இப்னு ஜலாலுதீன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
