பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 31 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மருத்துவர்களை நியமித்தமைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன் பிரசுரம் வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "அமைச்சருக்கு நன்றி..!"

0 கருத்துரைகள்!

இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே -க்கு எதிரான சுவரொட்டி, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரி சுவரொட்டி போன்றவற்றினை அவ்வப்போது வெளியிட்டு வந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.அருள் முருகன், இம்முறை தனது சக பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜனுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணி குறித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "மருத்துவர்கள் தேவை"

திங்கள், 27 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் அறிவித்து உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.

1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Source: Dinamani

மேலும் வாசிக்க>>>> "ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு..."

0 கருத்துரைகள்!

சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க, புதிய எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை தொடங்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (26.12.2010) செய்தியாளர்களிடம் கூறியது:

சுனாமி துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது. சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய மாநில அரசுகள் சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,090 வீடுகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

ராஜீவ்காந்தி சுனாமி நிவாரணத் திட்டத்தில் 1,589 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

கடற்கரையில் 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தூரத்துக்குள் குடியிருப்போருக்கு வீடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில், 351 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் சிறப்புத் திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இதுவரை ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

சுனாமியில் பெற்றோரை இழந்த 52 குழந்தைகள், கடலூர் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இலவசக் கல்வி, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தகவல்களை தெரிவிக்க தற்போது வயர்லஸ் கருவிகள், கட்டணமில்லா தொலைபேசி வசதி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் பல நேரங்களில் மின்சாரம் துண்டிப்பால் கருவிகள் இயங்காத நிலையும் உள்ளது. எனவே தனி எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டவர் நெய்வேலியில் நிறுவப்படும் என்றார் ஆட்சியர்.

Source: Dinamani

மேலும் வாசிக்க>>>> "கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க F.M. ரேடியோ"

0 கருத்துரைகள்!

அக்டோபர்- டிசம்பர் காலாண்டுக்கான மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் என்று, கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சி.மு. ரவிராம் அறிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய, விழுப்புரம் மண்டலத்துக்கான நுகர்வோர் குழுக்களின் மின்வாரிய குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு, விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

விழுப்புரம் மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான மனுக்கள் ஏதேனும் இருந்தால், கடலூர் மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்புமாறும், மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Source: Dinamani

மேலும் வாசிக்க>>>> "29-ல் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்"

1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த விநோதம் அம்மாள் (97) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே. அமர்சந்த் சர்மா, நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்க நிர்வாகி ஒய். ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் செய்தனர்.

Source: Dinamani

மேலும் வாசிக்க>>>> "கண் தானம்"

புதன், 22 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

செவ்வாய், 21 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!வெளியூர் செல்லும் நமதூர் அன்பர்கள் கவனத்திற்கு...

வெளியூரில் உள்ள சில ஓட்டல் மற்றும் மெஸ்களில் மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரில் உணவை பார்சல் செய்து கொடுக்கின்றனர். வெப்பம் காரணமாக, பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள கெமிக்கல் உணவு பொருட்களில் கலக்கக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு MYPNO அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் வாசிக்க>>>> "வேண்டாமே பிளாஸ்டிக் உணவுப் பொட்டலம்...!"

திங்கள், 20 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் செம்மாங்குப்பம் (சிப்காட்) அருகே இன்று காலையில் ஏற்பட்ட சாலைவிபத்தில் பள்ளிமாணவிகள் உட்பட நால்வர் மரணமடைந்தனர்.

கடலூரில் உள்ள கல்வி நிலையங்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர் இவர்கள் தினந்தோறும் வேன்களில் பள்ளிகளுக்கு சென்றுவருவது வழக்கம்.

அரையாண்டு தேர்வு நடந்துவரும் நிலையில் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற ஓரு வேனும், அருகே உள்ள தொழிற்ச்சாலை பணிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மரணமடைந்தனர். பலியான மாணவிகளில் இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடதக்கது.காயமடைந்த மாணவிகள் கடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க>>>> "கடலூர் அருகே விபத்து...."

ஞாயிறு, 19 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

அது ஒரு எளிமையான விழா, ஆனால் சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்தது எனலாம், அது நேற்று மாலை ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலில் சிங்கை தொழிலதிபர், சமூக சேவகர் S.M. ஜலீல் அவர்களுக்கு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற பாராட்டு விழா.

ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மீராப்பள்ளி இமாம் முஜீபுர் ரஹ்மான் உமரி கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.

தலைமையுரையாற்றிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டைக்கு மட்டுமின்றி அருகிலுள்ள பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வியல் முன்னேற்றம், உயர்கல்விக்காக சகோதரர் S.M.ஜலீல் ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டார், மேலும் உயர்கல்விக்காக தொழிலதிபர் H.M.ஹனிபா ஆற்றிவரும் பணிகளுக்காகவும் ஊர் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்தார்.

பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகங்கள், பல்வேறு அமைப்புகள், சார்பாக பொன்னாடை அணிவித்து தங்களின் அன்பினை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய S.M.ஜலீல் தனது உரையில், இளைஞர்கள் - பெரியோர்கள் குர்ஆன் ஓதுவதற்கு வசதியாக மக்தப்கள் ஏற்படுத்தவேண்டுமென்றும், தனது நீண்ட நாள் விருப்பமான பரங்கிப்பேட்டை நகரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும், அதற்கான உதவிகளை செய்யவும் தான் தயாராக இருப்பதாகவும் இக்கூட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கூறியது, கூட்டத்திற்கு வந்திருந்தோரை நெகிழ வைத்தது. இதுப்போன்ற நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள் நம்மிடையே பல்கி பெருக வேண்டும். அதுவே சமூக முன்னேற்றத்திற்கான வலுவான கட்டமைப்பினை உருவாக்கி தரும்.

கூட்டத்தில் தொழிலதிபர் H.M.ஹனிபா, பரங்கிப்பேட்டையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள், பைத்துல்மால், கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம், இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம், முஸ்லீம் லீக், தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "வேண்டும் நல்ல உள்ளங்கள்...!"

சனி, 18 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

காஜியார் சந்தில் மர்ஹும் ஜே.உதுமான் அலி அவர்களின் மகளாரும், இசட்.முஹம்மது நெய்னா அவர்களின் மனைவியும், எம். அன்வர் அலி, மர்ஹும் கவுஸ் மியான் இவர்களின் தாயாரும், என். ஜவஹர் அலி, முஹம்மது பாருக், முஹம்மது நாசர், முஹம்மது கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய முஹம்மதா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பளியில்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

வியாழன், 16 டிசம்பர், 2010 2 கருத்துரைகள்!

திண்டுக்கல் யூசுபியா மதரசாவின் முதல்வரும்,முதுபெரும் மார்க்க அறிஞரும் சிறந்த பேச்சாளருமான கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள் இன்று மாலை மர்ஹுமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் கீரனூரில்.

.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மேலும் வாசிக்க>>>> "கலில் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத்"

1 கருத்துரைகள்!

படிமம்:LittleNeck clams USDA96c1862.jpgபரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறி முதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

புதுவையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி ஒரு லாரியில் கார்பைட் கல் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆற்று கிளிஞ்சல்கள் கடத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து, அந்த லாரியை பிடிக்க உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் ஏட்டுகள் ரவி, விஜய குமார் மற்றும் போலீசார் பி.முட்லூர் பகுதிக்கு விரைந்து வந்து அந்த வழியாக தார்பாய் போட்டு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த லாரியில் எவ்வித ஆவணம் இல்லாமல், அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்களை காரைக்காலுக்கு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து லாரி டிரைவர் புவனகிரி அருகே உள்ள மதுராந்தகநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் காத்தவராயன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Daily Thanthi - Photo: MYPNO

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்; டிரைவர் கைது"

0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை,டிச.16-

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசினார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூர் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கும் விழா வி.கே.ஐ. திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார். மாவட்ட உதவி செயற்பொறியாளர் சரவணக் குமார், சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராம ராஜு, தாசில்தார் காமராஜ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் முத்து. பெருமாள், குமராட்சி ஒன்றியக் குழு தலைவர் மாமல்லன், பேரூராட்சி மன்ற தலைவர் முகமது ïனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 2973 பயனாளிகளுக்கு தகுதி அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 327 பேருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் வீடு கட்டுவது என்பது கனவாகவே இருந்து வந்த நிலையில் அந்த கனவை நினைவாக்கியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசைகளே இருக்காது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் 5-வது முறையாக நடந்து வரும் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபரும் இந்த அரசால் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு அதிக அளவில் செங்கல் தேவைப்படுகிறது. செங்கல் சூளை வைத்து நடத்தும் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டு உளளது. தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 43 ஆயிரத்து 438 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் 6 ஆயிரத்து 407 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர். இதற்காக கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.19 கோடியே 14 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேருக்கு ரூ.359கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 376 குடும்பங்களுக்கு இலவச டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 69 ஆயிரத்து 54 பேருக்கு டி.வி. வழங்கப்பட்டு உள்ளது. இவ்வளவு திட்டங்களை அறிவித்துள்ள இந்த அரசுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிக்க வேண்டும். 6-வது முறையாக கலைஞர் முதல்- அமைச்சராக வருவார். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அப்போது தான் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜெயலலிதா வந்தால் இந்த திட்டத்தை ரத்து செய்து விடுவார். சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்சவள்ளி தியாகராஜன், டாக்டர் மனோகர், நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், மாவட்ட பிரதிநிதிகள் காண்டீபன், மணிவண்ணன், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாராமன், கலையரசன், இளைஞரணி ஆயிப்பேட்டை ஜெயச்சந்திரன், ராம் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: Daily Thanhti
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட தகுதி அட்டை வழங்கும் விழா!"

0 கருத்துரைகள்!
புதன், 15 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை கும்மத்துப்பள்ளி தெரு நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நசுருத்தீன் பாரளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.
மேலும் வாசிக்க>>>> "ஆசிரியர் நியமனம்: திருமா-விடம் இ.த.ஜ கோரிக்கை"

செவ்வாய், 14 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: P.I.Jகுழுமம்
மேலும் வாசிக்க>>>> "கடலூர் மாவட்ட ஜமாஅத் அலுவலக திறப்பு விழா"

திங்கள், 13 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!
0 கருத்துரைகள்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் வகுப்பு நேற்று TNTJ மர்கஸில் தொடங்கப்பட்டது. இறைவன் நாடினால் வாரந்தோரும் ஞாயிற்றுகிழமை அன்று நடைப்பெற இருக்கும் இவ்வகுப்பு மூலம் தஜ்வீத் அடிப்படையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் மனனம் செய்யும் பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை TNTJ நிர்வாகிகள் முத்துராஜா, பாஜுல் ஹுஸைன், துபாய் இஸ்மாயில். சேக் தாவூத் ஆகியோர் செய்துள்ளனர்.

படம்: TNTJ

மேலும் வாசிக்க>>>> "திருக்குர்ஆன் வகுப்பு"

0 கருத்துரைகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் பயான் நேற்றிரவு காஜியார் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்தில் TNTJ  மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பஈ "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

படம்: TNTJ
மேலும் வாசிக்க>>>> ""மண்ணறை வாழ்க்கை" - சொற்பொழிவு"

சனி, 11 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம் தம்மாம் நகரில் மூத்த நிர்வாகி கவுஸ் மாலிமார் இருப்பிடத்தில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வஜ்ஹுதின் தலைமை தாங்கினார். உப தலைவர் கலீமுல்லாஹ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் அமைப்பின் செயல்பாடுகள், மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

படம் : நௌஷாத் அலி
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்"

புதன், 8 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகளை தோள் பைக்குள் மறைத்து விமானத்தில் கொண்டு வந்தவரை தரையிறங்கியதும் அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதை அறிந்து, விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்தோனேசியா & ஐக்கிய அரேபு எமிரேட்டுக்கு இடையே சென்ற இத்திஹாத் விமானத்தில் பாம்புகளை ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அவர் வைத்திருந்த தோள் பையை சோதனை செய்ததில். அதில் மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகள் இருந்தன. மேலும் அவர் வைத்திருந்த பெட்டியில் 2 கிளிகள் மற்றும் 1 அணில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


விமானத்தில் அவற்றில் ஏதாவது வெளியேறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படி இதை பரிசோதிக்காமல் விமானத்தில் ஏற அனுமதித்தனர் என்று வியப்பு தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க>>>> "உஷ்..மலைபாம்பு"

செவ்வாய், 7 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!


தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுர் நகரில் நடைப்பெற்றது , அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த சனிக்கிழமையன்று சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ. அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் S.M..ஹிதாயத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.

பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதின் காரணமாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையினால் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தவ்ஹீத் தலைமையில் அபுல்ஹஸன், தெளலத் அலி, ஹாஜா, ஹம்துன் அப்பாஸ், சாஹுல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை செயலாளருமான மூசா ராஜா, ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்க உரை நிகழ்த்திய டாக்டர் மீர் முர் முஸ்தபா உசேன், மூசா ராஜா IAS , ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி ஆகியோர் பல்வேறு அரிய ஆலோசனைகளையும், துறை சார்ந்த அனுபவங்களையும் வழங்கினார்கள்

கவிக்கோ தனது தலைமையுரையில், “எட்டாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமியர்கள் பல துறைகளில் ஆண்டு வந்தார்கள். விஞ்ஞானம் என்பது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு வழங்கிய பிச்சை. மருத்துவத்துறை நம் சமுதாயத்திற்கு புதியதும் அல்ல, மருத்துவ துறையில் தலைச்சிறந்து விளங்கிய இஸ்லாமிய சமுதாயம் தான் இன்று மிகப்பெரிய நோயாளி சமுதாமாக இருக்கிறது”, என்று ஆதங்கப்பட்ட கவிக்கோ, இறைவன் நாடினால் அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார், தொடர்ந்து பேசுகையில், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது என்றும், அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் 65 உறுப்பினர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பங்களிப்பு காசோலைகளை வழங்கினார்கள். பரங்கிப்பேட்டை சார்பில் 6 காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் தனியார்(கள்) பெயரில் தான் அமைந்திருந்தது. அதில் விதிவிலக்காக ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்ட ஒரே காசோலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு நமது சமுதாய மக்கள் பயனடையும் வகையில் நமது ஜமாஅத்-திற்கு கிடைக்கும். தொடர்ந்து இதுப்போன்ற ஆலோசனை கூட்டங்கள் திருநெல்வேலி, கீழக்கரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைப்பெற இருக்கிறது

கூட்டத்தின் இறுதியில் வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்பால், சாதிக் மற்றும் நீடுர் மதரஸா நிர்வாகிகள், வக்ஃப் வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க>>>> "“மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம்” - கவிக்கோ"

0 கருத்துரைகள்!

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பரங்கிப்பேட்டை நகர தமுமுக – ம.ம.க. சார்பில் தலைவர் ஜாக்கீர் ஹுஸைன் தலைமையில் ஒன்பது கார்கள், இரு வேன்களிலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஹஸன் அலி, செய்யது, பிலால்  உள்ளிட்ட நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.


காட்டுமன்னார்குடியிலிருந்து நமது நிருபர் 
மேலும் வாசிக்க>>>> "டிசம்பர் – 6 தொடர் முழக்கப் போராட்டம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை ஹாஜி எஸ்.ஒ.அலாவுதீன்  துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஐக்கிய நல கூட்டமைப்பின் சிறந்த திட்டங்களுல் ஒன்றான அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பரங்கிப்பேட்டையில் இரண்டு சகோதரர்களை  நியமித்து முழுகணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சமுதாய மக்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உதவி தேவைப்படும் சகோதர சகோதரிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதை வரவேற்கிறோம் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 மேலும் வாசிக்க>>>> "மக்கள் தொகை கணக்கெடுப்பு ..."

திங்கள், 6 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!


தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என அவர் கூறினார். 
மேலும் வாசிக்க>>>> "மருத்துவக் கல்லூரி...!"

ஞாயிறு, 5 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

:வீராணம் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் வீராண ஏரியில்லிருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர்  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இம் மாவட்டத்தில் உள்ள ஓடைகள் வழியாக வீராணம் ஏரிக்கு பல்லாயிரம் கன அடி நீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 960.20 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு வைக்கப்பட்டது. இந் நிலையில்.நீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 1,343 மில்லியன் கன அடி வரை ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.பின்னர் மழையின் தீவிரம் குறைந்தும் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக ஒரே  அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


மீண்டும் மழை பெய்யும் என எதிர்பாக்கபட்ட நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை முற்றிலுமாக குறைக்க மாவட்ட நிர்வாகம்  முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 763.20 மில்லியன் கன அடியாக குறைந்தது. நேற்று காலை காலை முதல் வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது.வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால்சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும் வாசிக்க>>>> "வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு குறைந்தது..!"

வெள்ளி, 3 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், நடக்கும் நாள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 2ம் தேதி பிளஸ்- 2 தேர்வும், 28 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்குகிறன. பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி.,) 28 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. அட்டவணை இறுதி செய்யப்பட்டது. இந்தாண்டு, சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்


பிளஸ் 2


தேர்வு தேதி தேர்வுப் பாடம்


2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி


எஸ்.எஸ்.எல்.சி.,


28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்


மெட்ரிகுலேஷன்


22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்


மேலும் வாசிக்க>>>> "தொடங்குது..பொது தேர்வு"

வியாழன், 2 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: தமிழகத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 23 செ.மீ மழை கொட்டி தீர்த்தப்பிறகு, இன்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆனால் நன்பகல் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. வாரச் சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.

டில்லி சாகிப் தர்கா, கருணாநிதி சாலை, மூக்கணங்கயிறு, கவுஸ் பள்ளி போன்ற குடிசைப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜமாஅத்தின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் வாசிக்க>>>> "தொடரும் மாமழை..."

புதன், 1 டிசம்பர், 2010 0 கருத்துரைகள்!

பொதுவாக மழைக்காலத்தில் வெள்ளம் தாழ்வான குடிசை பகுதிகளை நோக்கி பாய்வதும், சூழ்ந்து நின்று அழிவை தருவதுமே நாம் இதுவரை பார்த்து வந்த மழை., ஆனால் இந்த முறை அங்கிங்கெணாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது., மழைச்சேத நிவாரணப்பணிகளில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகம் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மினி ஷாதி மஹாலில் சுமார் 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிக்காக ஜமாஅத் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.

ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் , பேரூராட்சி மன்ற துனைத் தலைவர் செழியன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் - கவுன்சிலர்கள் ஆகியோர் தில்லி சாஹிப் தர்கா மற்றும் ஏணைய பகுதிகளுக்கு வட்டாட்சியருடன் சென்று வெள்ளச் சேதப் பகுதிகளை பார்வையிட்டனர். பரங்கிப்பேட்டையின் மழைக்கால படங்கள் வாசக அன்பர்களின் பார்வைக்குமேலும் வாசிக்க>>>> "பெய்தது பெருமழை..!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234