புதன், 13 மே, 2009

பரங்கிப்பேட்டையில் விறுவிறு வாக்குபதிவு!

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது.

வெயில் காரணமாக 7 மணிக்கே மக்கள் தமது ஜனநாயக கடமையாற்ற சீக்கிரமாக வாக்குச் சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஆர்வத்துடன் வந்து தமது வாக்குப்பதிவை செலுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாக்குபதிவில் ஆண்களை விட பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

Source: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 15-ம் தேதி முதல் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2009-10 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் தொடங்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (14-ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் கூறியுள்ளதாவது:

"அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, விண்ணப்ப விநியோகம் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்து, அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்'.

எனவே, வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிகிறது.

அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! +2 முடிவு நாளை வெளியாகிறது!! நாளையே பள்ளிகளில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்!!!

ஏழு லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக் கல்வி இயக்குனர் பி. பெருமாள்சாமி அறிவித்துள்ளார்.

+2 தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கியது.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையாக விளங்குவது +2 தேர்வு. இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டுதான் அவர்கள் டாக்டர்களாகவோ, என்ஜினீயர்களாகவோ, அறிவியல் மற்றும் கலை பட்டதாரிகளாகவோ வரமுடியும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த +2 தேர்வை 5 ஆயிரத்து 40 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 630 பேர் 1,738 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் மாணவிகள்.

கடந்த ஆண்டைவிட 54 ஆயிரத்து 326 பேர் கூடுதலாக எழுதினார்கள்.

தீவிர பாதுகாப்பு

புதுச்சேரியில் 29 மையங்களில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 பேர் எழுதினார்கள். சென்னையில் 435 பள்ளிகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 860 பேர் எழுதினார்கள். இவர்கள் தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு வினாத்தாள் இருப்பு மையங்களிலும், தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பறக்கும் படையினரும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். தேர்வு மார்ச் 23-ந் தேதி முடிவடைந்தது.

நாளை வெளியாகிறது

இந்த நிலையில் 7 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை வெளியிடப்படுகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்விற்கான முடிவை, 14-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில்

பின்வரும் இணையதளங்கள் மற்றும் செல்போன் எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் எண்ணிலும் (1250108), பி.எஸ்.என்.எல். மொபைல் எண்ணிலும் (1250108) தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போனில்...

தினத்தந்தி வாசகர்கள் +2 பரீட்சை மதிப்பெண்களை தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் போனில் DTHSC என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் பரீட்சை எண்ணையும் டைப் செய்து 54545 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உங்கள் மதிப்பெண் பட்டியல் சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் வரும்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...