பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 30 மே, 2008 5 கருத்துரைகள்!

ராயல் தெரு @ கிதர்சா மரைக்கார் தெரு தெருவில் மர்ஹூம் S. முஹம்மது ஹனீஃபா மரைக்காயர்அவர்களின் மனைவியும், H.M.கலிமுல்லா, H.M.மைதீன், H. பாவா மரைக்காயர், H.ஷேக் மரைக்காயர், ஹாஜி முஹம்மது அலி ஆகியோரின் தாயாருமான B. ரொகையா பீவி மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்
மேலும் வாசிக்க>>>> "மர்ஹூம் ஆகிவிட்டார்கள்."

3 கருத்துரைகள்!

10 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் சற்று முன்பு (1 மணி நேரம்) வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி முனா ஆஸ்திரேலியன் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி (5 பேருக்கு 5 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. (முதல் மதிப்பெண் 439 முஹம்மது மர்ஜுக்) கலிமா மேல்நிலைப்பள்ளி 86 சதவிகிதம் தேர்ச்சி (29பேருக்கு 25 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. (முதல் மதிப்பெண் 404 ஜுபைதா) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 54 சதவிகிதம் தேர்ச்சியும் (கடந்த முறை 76 சதவிகிதம் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 81 சதவிகிதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்களாக முறையே 500க்கு 470, 465, 462 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் துல்லிய விபரங்கள் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில்...
மேலும் வாசிக்க>>>> "10 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவுகள்"

செவ்வாய், 27 மே, 2008 1 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டையின் மற்ற தெருக்கள போலல்லாமல் காஜியார் சந்து சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி சில நாட்களிலேயே பிரச்சனைகள் கண்டு முடங்கியது. இதனால், பரப்பரபான சின்னக்கடை அருகிலுள்ள அந்த சாலையினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தெருவின் மத்தியில் ஜல்லி, மணல் மலைகள கொட்டி மிதிவண்டி கூட சிரமப்பட்டு செல்லும் அவலநிலைகடந்த சுமார் இரண்டு மாதங்களாக நீடித்தது. இதற்கான காரணம் அறிய புகுந்தபோது, அகலம் குறைவாக போட இருந்த சாலையை முறையீட்டின் பேரில் கலெக்டர் வந்து நேரில் கண்டு ஆய்வு செய்து அகலமாக மாற்றி அமைக்க உத்திரவிட்ட பின்னரும் காண்டிராக்டர்கள் பழையமாதிரியே சாலை அமைக்க முயன்றதால் பொதுமக்கள் சிலர் மீண்டும் முறையிட்டு அப்பணியை நிறுத்தியதாகவும், பிற்பாடு அரசு நிர்வாகத்தில் நிலவிய சில புரிந்துணர்வுயின்மையால் ஏற்பட்டதே இந்த தாமதம் என்றும் தகவல் கிடைத்தது. தற்போது சாலைப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. நல்ல அகலமான சாலையாக....
மேலும் வாசிக்க>>>> "காஜியார் சந்து... மீண்டும் சாலைப்பணி துவக்கம்"

ஞாயிறு, 25 மே, 2008 2 கருத்துரைகள்!

குறிப்பிட்ட சில பண முதலைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சிப்காட்தான் நம்மை போன்ற சமான்ய மக்களுக்கு சாபக்கேடாக வந்து வாய்த்துள்ளது. சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒரு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு. இது குறித்து வலைப்பூவில் ஏற்னகவே 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன? தகவல் வெளியிட்டுள்ளோம்.

ஒரு சராசரி மனிதனைவிட 2000 மடங்கு கேன்சர் ரிஸ்க் இருக்கிறதாம் இந்த பகுதி மக்களுக்கு. அது மட்டுமின்றி, சிப்காட் கழிவுகள் கடலுக்கு செல்வதால் இப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்ணுபவருக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதாம், அவர் எந்த நாட்டிலிருந்தாலும் சரி, இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில்.....!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எத்தனை ஆய்வறிக்கைகள், புகார்கள் என்று குவிந்தவண்ணமிருந்தும் அவற்றையெல்லாம் பெயரளவிற்கு பரிசீலிக்கிறோம் என்று சொல்கிறதேயொழிய இதுவரை எந்த நடவடிக்கையும் முறைப்படி எடுக்கவில்லை.

தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இதர சுற்றுப்புறசூழல்/மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் என்று அடிக்கடி இந்த ஏரியாவில் உள்ள காற்று, மண், நீர் போன்றவற்றை ஆரயாச்சி செய்து கேன்சர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் (Toxic Chemicals) மிகுதியாக உள்ளது என்று ஆய்வறிக்கைகளை சமர்பித்தாலும்... இதுவரை நோ ஆக்ஷ்ன்தான்.

இதற்கிடையில் பொதுமக்களை ஏமாற்றுவதற்கும், வாக்குகளை பெறுவதற்கும் அரசியல் கட்சிகள் அடிக்கடி போராட்டங்கள் என்று பெயரளவிற்கு அறிவித்து பிறகு பேரங்களின் ஆதாயங்களைக் பெற்றவுடன் அட்ரஸே தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள். போரட்டங்களை அறிவிப்பதே இது போன்ற பேரங்களுக்கத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?பொதுமக்கள் நேரிடியாக களத்தில் இறங்கி போராடினால், நாங்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களே தவிர முறையான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. சிப்காட் தொழிற்பேட்டையால் அரசியல் கட்சிகள் ஆதாயமடைந்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பார்கள்?

ஆறுதலுக்காக ஒரு லிங்க் தருகிறேன். இதை க்ளிக் செய்து தமிழக முதல்வருக்கு நீங்கள் பெட்டிஷன் அனுப்பலாம். இது தமிழ்நாடு அரசின் செயலகத்தில் உள்ள சி.எம். செல்லிற்கு ஃபாக்ஸ் செய்தியாகப் (Online Fax Message) போய் சேரும்.

SEND AN ONLINE FAX URGING TAMIL NADU GOVERNMENT TO STOP POLLUTING CUDDALORE
http://petitions.aidindia.org/cuddalore/

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் கூட கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியரை இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர். தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி. ஆனாலும் என்ன நடவடிக்கைகள், எப்போது எடுக்கப்படும் என்று வியலுக்காக காத்திருப்புகள் தொடரத்தானே செய்கிறது.

தேசிய அளவில் எத்தனையோ கட்சிகளும், அமைப்புகளும் பெப்ஸி-கோக் நச்சுப் பொருளுக்காக போரடியதை அவர்கள் உட்பட நாமும் வசதியாக மறந்து நிற்கிறோமே!

இவ்வளவு தெரிந்தும் கூட இன்னமும் பரங்கிப்பேட்டை மக்கள் தன்னுடைய வாரிசுகளுக்கு சிறந்த கல்வி(?) புகட்டச் செல்கிறோம் என்கிற பெயரில் கடலூருக்கு தனிக்குடித்தனம் புகுவிழாக்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கேன்சர் ஏரியா... உள்ள வராதே! என்று ஒரு போர்டு வைக்கனும் என்று தோனுகிறது எனக்கு... கடலூர் எல்லையில்.

வேறு ஏதாவது மாற்று வழி தேவை இவற்றை தடுப்பதற்கு. அறிவுப்பூர்வமாக யோசித்து உங்களின் கருத்துகளை இங்கு பதிவுடுங்கள். அலசுவோம்.... ஆலோசனை செய்வோம்!..... தொடரும்....

குறிப்பு: இந்த தகவல்கள் எல்லாம் எனது கற்பனையல்ல. இது குறித்து முழு விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை க்ளிக்கவும்.

http://mypno.blogspot.com/2008/04/25.html
http://www.alternet.org/healthwellness/85630/?page=entire
http://cuddaloreonline.blogspot.com/2008/05/toxic-chemicals-in-sipcot-cuddalore-and.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
மேலும் வாசிக்க>>>> "கேன்சர் ஏரியா... உள்ள வராதே!"

வியாழன், 22 மே, 2008 0 கருத்துரைகள்!

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை தன்னகத்தே கொண்ட பயனுள்ள இணையங்கள்.
..................................................
மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இண்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் புதிய சேர்க்கை குறித்து விபரமறிய
http://www.niftindia.com/
——————————–

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பி எட் நுழைவுத்தேர்வு முடிவுகளை அறிய
http://www.tnou.ac.in/
————–
ஐஐடி நுழைவுத் தேர்வு பற்றிய விபரமறிய
http://jee.iitm.ac.in/

—————————–
அகில இந்திய பி.இ. நுழைவுத்தேர்வு குறித்த விபரமறிய
http://www.aieee.nic.in/
————-
ஜெத்தா இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி மூன்றாண்டு பி.எச்.டி ஆய்வுப் படிப்பினை மேற்கொள்வோருக்கு தகுதி அடிப்படையில் கல்வி நிதி வழங்குகிறது. அதுகுறித்த விபரமறிய
http://www.isdb.org/
—————–
சென்னை எஸ் ஆர்.எம். நிகர் நிலைப் பல்கலைகழக இணைய முகவரி : http://www.srmuniv.ac.in/
———————
கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை அறிய
http://csirhrdg.res.in/
————–
பிளஸ் டூ தனித்தேர்வுகள் பற்றிய அறிவிப்பைக் காண
http://www.tn.gov.in/dge
——————–
முஸ்லிம் மாணவர்கள் அரசு கல்வி நிதி உதவி பற்றிய விபரமறிய
http://www.minorityaffaris.gov.in/
————-
ரயில்வே பணியிடங்கள் குறித்த விபரமறிய

http://www.rrchennai.org.in/http://www.southernrailway.org/http://www.rrbthiruvananthapuram.net/http://www.rrbmumbai.gov.in/ ————————————–
பாராளுமன்ற வேலை பற்றிய விபரமறிய

http://www.parliamentofindia.nic.in/
————————————
பாரத ஸ்டேட் வங்கி
http://www.statebankofindia.com/
————————————
இஸ்ரோ
http://www.isro.gov.in/
———————————–
எல்லைப் பாதுகாப்புப் படை :
http://www.bsf.gov.in/
மேலும் வாசிக்க>>>> "பயனுள்ளத் தளங்கள்"

ஞாயிறு, 18 மே, 2008 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணியை ஒன்றிய ஆணையாளர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். வி.பஞ்சங்குப்பத்தில் இருந்து வில்லியநல்லூர் வரை செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய் ரூ. 5 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடக்கிறது. பணி நடக்கும் இடத்தில் தகவல் பலகை, முதலுதவி பெட்டி, குடிநீர் வசதி, அடையாள அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் வாசிக்க>>>> "தூர் வாரப்படும் பக்கிங்ஹாம் கால்வாய்."

வியாழன், 15 மே, 2008 3 கருத்துரைகள்!

கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு கடைகளில் (பேமிலி கார்னர்ஸ், சவூதியா டைம் சென்டர்) நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் குறையாத நிலையில் தற்போது மீண்டும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
மிக பிஸியான கீரைக்கார தெருவில் அமைந்துள்ள கிளாஸிக் மொபைல்ஸில் (மீண்டும் மொபைல் கடை) நேற்று முன்தினம் இரவு சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள மொபைல்கள் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் கொள்ளை போயுள்ளன. மேலும், நெல்லுக்கடை தெருவில் உள்ள கோவிலிலும் திருட்டு போயுள்ளது. இதுமட்டும் அல்லாமல், சுமையா சூப்பர் மார்க்கெட் அருகிலுள்ள ஒரு கடையில் திருட்டு முயற்சி நடைபெறும்போது அருகில் இருந்த வீட்டில் இருந்து ஒருவர் சத்தம்போட்டதால், திருடர்கள் ஓடிவிட்டதாக தெரிகிறது. வெளியூர்வாசிகள் அதிகம் புழக்கம் இல்லாத நமதூரில் இதுபோல் அடிக்கடி நடைபெறும் கொள்ள சம்பவங்கள் அதுவும் முக்கியமான தெருக்களில் பொதுமக்களிடையே குறிப்பாக வியாபார மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
" எதற்கும் இருங்கள் என் கடைக்கு எக்ஸ்ட்ரா பூட்டு போட்டேனா என்று பார்த்து விடுகிறேன்...! "
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் தொடர்கதையாகும் கொள்ளைச்சம்பவங்கள்."

3 கருத்துரைகள்!

ஹக்கா சாஹிப் தெரு மர்ஹும். பஜ்லுத்தீன் சாஹிப் அவர்களின் மனைவியும், நிஜாமுத்தீன் அவர்களின் சிறிய தாயாரும், அப்துல் லத்தீஃப் அவர்களின் தாயாருமான ரஹீமா பீவி அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள். அன்னாருக்காக துஆ செய்யுமாறு கோருகிறோம்.
மேலும் வாசிக்க>>>> "துஆ செய்யுமாறு கோருகிறோம்."

2 கருத்துரைகள்!

தெத்துக்கடை, குருநாத செட்டி மேடு தெருவைச்சேர்ந்த அப்பா என்னும் எம். முஹம்மது கான் அவர்கள் மனைவியும், கபார் அலிகான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் இவர்களின் தயாயருமாகிய ஹாஜிபா மெஹருன்னிஸா பீபி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாருக்காக துஆ செய்யுமாறு கோருகிறோம்.
மேலும் வாசிக்க>>>> "துஆ செய்யுமாறு கோருகிறோம்"

புதன், 14 மே, 2008 2 கருத்துரைகள்!

கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டையில் மிகக் கடுமையான காற்று வீசிக் கொண்டிருக்கி்ன்றது. மின் வசதி பல மணி நேரம் துண்டிக்கப்பட்டு மக்கள் சங்கடத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவ்வப்போது மழையும் பெய்துவருகின்றது.
மேலும் வாசிக்க>>>> "மழை"

திங்கள், 12 மே, 2008 6 கருத்துரைகள்!

"நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்...." இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.
நிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது.
பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜேந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும்,
மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,
இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும்,
டி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.

தேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை.
இந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.
மேலும் வாசிக்க>>>> "கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல்"

சனி, 10 மே, 2008 4 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளிச் சேர்ந்த செல்வி. இனியா என்கிற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 2 வது இரண்டத்தைப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் 1036 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விபரம்: தமிழ்: 177, ஆங்கிலம்: 128, கம்ப்யூட்டர் சயின்ஸ்: 173, எகனாமிக்ஸ்:180, புவியியல்:179, வரலாறு: 199.

ஏழை விவசாயியின் மகளான இம்மாணவி டியூஷன் போன்றவைக்கு வசதியில்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தினாலும் தன்னால் இம்மதிப்பெண்களை பெறமுடிந்தது என குறிப்பிட்டதுடன் மேற்கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போவதாக கூறினார்.
மேலும் வாசிக்க>>>> "வரலாறு பாடத்தில் சேவாமநதிர் பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவது இடம்."

1 கருத்துரைகள்!அரிதாகி வரும், புத்தக வாசிப்பு எனும் அற்புத பழக்கத்தை மக்களிடையே குறிப்பாக சிறார்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட புத்தகம் மற்றும் சி.டி./டி.வி.டி. கண்காட்சி மே 1 முதல் 4 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.

இது குறித்து கல்விக் குழு தலைவர் ஹமீத் மரைக்காயர் கூறியதாவது: கல்விக்குழு, ஐ.இ.டி.சி யுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் சற்று மெத்தனமாக இருந்த நிலை மாறி திரளான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு அதிகளவில் புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தது ஏற்பாட்டாளர்களுக்கு நிறைவினை தந்தது. இந்த கண்காட்சிக்கான அறிவிப்பினை குழுமத்திலும், வலைப்பூவிலும் கண்டு எந்த கோரிக்கையும் வைக்கப்படாமலேயே அதற்காக மனமுவந்து நிதியளித்த சகோதரர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக என தெரிவித்தார்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை புத்தகக் கண்காட்சி"

வெள்ளி, 9 மே, 2008 11 கருத்துரைகள்!


12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு தற்போது 2 மணி நேரம் முன்பு வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி கலிமா மேல்நிலைப்பள்ளி 87 சதவிகிதம் தேர்ச்சி (23க்கு 20 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவிகிதம் தேர்ச்சியும் (102 க்கு 47 பேர் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55 சதவிகிதம் தேர்ச்சியும் (122க்கு 67 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளன. 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்று கலிமா மேல்நிலைபள்ளியை சேர்ந்த சுல்தானி என்கிற மாணவி (10ம் வகுப்பிலும் இவரே முதல் மதிப்பெண்) ஊரின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். முஹம்மது அக்ரம் (கலிமா நகர்) 1200 க்கு 991 மதிப்பெண் பெற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுபஸ்ரீ என்கிற மாணவி 1200க்கு 989 மதிப்பெண் பெற்று பள்ளி முதல் நிலை பெற்றுள்ளார்..

முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள உடனடியாக வழங்கி உதவிய பரங்கிப்பேட்டை கல்விக்குழுவிற்கு வலைப்பூ சார்பில் நன்றி

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முதல் நிலை சாதித்த மாணவ மாணவியரின் பேட்டிகள் வலைப்பூவில் வெளியாகும்.
மேலும் வாசிக்க>>>> "12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு"

புதன், 7 மே, 2008 0 கருத்துரைகள்!தெத்துக்கடை-காந்தி சிலையிலிருந்து ரேவு மெயின் ரோடு கடைசி வரையில் சுமார் 19 லட்சம் மதிப்பில் 3 கி.மீ. தூரத்திற்கு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே பெரிய கடைத் தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது சாலை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் வாசிக்க>>>> "சாலைப் பணிகள் மும்முரம்"

செவ்வாய், 6 மே, 2008 8 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் அருகே அமைந்துள்ள ஜெய்லானி காம்பிளக்ஸ் வளாகதில் அமைந்துள்ள சவுதியா டைம் சென்டர் மற்றும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் ஆகிய இரு கடைகளிலும் இன்று அதிகாலை சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவாடபட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்தில் சவுதியா டைம் சென்டர் கடையில் சுமார் 40,000 மதிப்புள்ள மொபைல் போன்கள், கைகடிகாராங்கள் மற்றும் ரொக்கமாக 2500 ரூபாயும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் கடையில் சுமார் 20,000 மதிப்புள்ள துணிமணிகள், ஆபரன மற்றும் வாசனை திரவிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறும் போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு அறியாத நபர் தன்னுடன் புவனகிரி வரை பயணித்ததாகவும், அந்நபரிடம் இருந்த இருபைகளில் நிறைய பொருட்கள் வைத்திருந்தகவும் போலிஸ் விசாரனையில் தெரிவித்தார்.

புகாரை அடுத்து, இத்திருட்டு சம்பவதில் தொடர்புடைய நபர், அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரனை நடத்தி வருக்கிறார்கள்.

இத்தகைய திருட்டு பரங்கிப்பேட்டையில் அரிதான ஒன்று என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "கடைகளை உடைத்துக் கொள்ளை."

ஞாயிறு, 4 மே, 2008 3 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாயில்களின் இமாம்களும் இணைந்த கூட்டமைப்பே நகர ஜமாஅத்துல் உலமா பேரவையாகும். பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம் கடந்த மாதம் 20 முதல் 30 தேதி வரை இனிதே நடைபெற்றது. ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் அல்குர்ஆனை அணுகும் முறை, இஸ்லாத்தின் நான்கு இமாம்களின் பங்களிப்பு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் போன்ற தலைப்புக்களில் பேச்சுப்போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் போட்டிகள் இன்ஷா அல்லாஹ் மே மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது. வருங்கால சமுதாயத்தை மார்க்க பற்றுள்ளதாகவும், தெளிந்த மார்க்க அறிவை பெற்றதாகவும் பெற்றோரையும் மற்றோரையும் மதிக்கக்கூடியதாகவும் கல்வியில் முன்னிலை பெற்றதாகவும், ஒழுக்கமுள்ளதாகவும் வார்த்தெடுப்பதே தங்களது குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தும் ஜமாஅத்துல் உலமா பேரவையினரின் பணி சிறக்க துஆ செய்வோம்.
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம்"

1 கருத்துரைகள்!

ஹக்கா சாஹிப் தெருவில் மர்ஹும். காதர்கான் அவர்களின் மகனாரும், ஜனாப். மன்சூர் அலி, காதர் அலி அவர்களின் தந்தையாருமாகிய சிராஜுத்தீன் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.
மேலும் வாசிக்க>>>> "மர்ஹுமாகிவிட்டார்கள்."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234