திங்கள், 4 ஜனவரி, 2010

உண்மையான புத்தாண்டு கொண்டாட்டம்


வருடப்பிறப்பு என்றால் நம்மில் பலருக்கு கொண்டாட்டம்தான் நினைவு வரும். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட, கவனிக்கப்படாத மக்களை பற்றிய நினைவு அப்போது வருவது பக்குவமுள்ள மனங்களுக்குத்தான் கைவரும் ஒரு விஷயமாகும். நமதூர் லயன்ஸ் கிளப் என்றழைக்கப்படும் அரிமா சங்கம் இந்த வருட பிறப்பின் முதல் நாளன்று செய்த காரியம் என்ன தெரியுமா? சாலிகண்டு தைக்கால் அருகே உள்ள அரசு முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அவர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்ததுதான்.
புத்தாண்டினை வரவேற்க குடித்து, கும்மாளமிட்டு வரம்பு மீறிய ஆட்டங்கள் போடும் மனிதர்கள் மத்தியில் இந்த முதியோர்களுக்கு ஒரு மறக்க முடியாத தினமாக ஆக்கி லயன்ஸ் சங்கம் செய்த இது உண்மையிலேயே அருமையான காரியம் தான்.
தமது உற்ற உறவினர்களிலாலேயே புறக்கணிக்கப்பட்டு வாழ்வின் அந்திக்காலத்தில் அன்பிற்கு ஏங்கி வாழும் முதியோர்களை இவ்வாறு கண்ணியப்படுத்தி அன்று ஒரு நாளாவது அவர்களின் முகங்களில் சிரிப்பினை பொங்க வைத்த லயன்ஸ் கிளப்பிற்கு பாராட்டுக்கள்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...