நமது தளத்தின் ஆசிரியர் எம்.ஐ.சிராஜூத்தீனுடைய மகன், ஐந்து வயதான ஃபஹீம் ஒரு வாரத்திற்கு முன்பு கத்தாரில் திறந்திருந்த சாக்கடை ஒன்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11மணியளவில் மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
எங்களில் ஒருவரான சகோ. சிராஜ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு mypno.com சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஃபாஹிமுடைய மறுமை நல்வாழ்வுக்கும், சிராஜ் குடும்பத்தாரின் மனவலிமைக்கும் இறையைப் பிரார்த்திக்கிறோம்.