ஞாயிறு, 10 மே, 2009

முன்னாள் படை வீரர்கள் தேர்தல் பணியாற்ற அழைப்பு!

தேர்தல் பணிக்கு வர விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் வரும் 11ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் எஸ்.பி., முன்னிலையில் அறிக்கை செய்து கொள்ளலாம்.

இது குறித்து எஸ்.பி., அலுவலக தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படை வீரர்களுக்கு உணவு மற்றும் உழைப்பூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற 4 நாட்களுக்கான உணவுப்படி மற்றும் உழைப்பூதியம் அவர்களின் நிலைக்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் 1,440 ரூபாய் முதல் 1,640 வரை வழங்கப்படவுள்ளது.

பணிக்கு வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் இதுவரை பணிக்கு வர விருப்பம் தெரிவிக்காமல் இருந்து தற்போது விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் படை வீரர்களும் வரும் 11ம் தேதி நேரில் ஆஜராகலாம்.

தங்களது முழுச்சீருடை, அடையாள அட்டை மற்றும் 4 நாட்களுக்கு தேவையான உடைமைகளுடன் வரும் 11ம் தேதி காலை 8 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் எஸ்.பி., முன்னிலையில் அறிக்கை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து விவரம் வேண்டுவோர் எஸ்.பி., அலுவலக தேர்தல் பிரிவு போன் 04142-284335 அல்லது முன்னாள் படை வீரர் நல அலுவலகம், கடலூர், போன் 04142-220732 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் கருணாநிதி! ஸ்டாலின் பேச்சு!!

சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் முதல்வர் கருணாநிதி என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு பல நல்ல திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது.

முதல்வர் கருணாநிதியின் சிறப்பான ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், திருமண உதவி தொகை 20 ஆயிரம் ரூபாய், இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு என பல திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட காலமாக போராடி வந்த சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை கருணாநிதி வாங்கி கொடுத்தார்.

திருமாவளவனை நமது கட்சி வேட்பாளராக கருதி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் முத்துப்பெருமாள், தி.மு.க., இளைஞரணி செயலாளர் திருமாறன், துணை செயலாளர் ராஜாராமன், நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணை தலைவர் செழியன், வக்கீல் தங்கவேல், பிரதிநிதி காண்டீபன், இளைஞரணி முனவர் உசேன், கோவிந்தராஜ், விவசாய அணி அர்ச்சுனன், பாலகுரு, சின்னஅஞ்சபுலி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் புகார்களைப் பதிவு செய்ய போலீசாரின் தானியங்கி கணினி - போன்கள்

பொதுமக்களின் புகார்களைப் பதிவு செய்ய டி.ஜி.பி., அலுவலகத்தில் தானியங்கி கணினி - தொலைபேசி மையம் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் "தானியங்கி கணினி வழி - தொலைபேசி' துவக்கப்பட்டுள்ளது.

தங்களது குறைகளைப் பொதுமக்கள் புகார்களாக பதிவு செய்யலாம்.

தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும், எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதியலாம்.

புகார்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தப் புகார்களை 044-64555100, 64556100 ஆகிய எண்களில் புகாரைப் பதிவு செய்யலாம்.

நேரடி அவசர உதவி தேவைப்படுவோம் எப்போதும் போல் அவசர உதவி "100"க்கும் போன் செய்யலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த நிலை பல்கலை., தேர்வு விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ரீட்டா கொரைற்றி லூர்தஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக இளநிலை, முதுநிலை, எம்.பில்., எம்.பி.ஏ., பி.ஜி.டி.ஐ.எம்., டி.ஜி.எம்., சான்றிதழ், டிப்ளமா படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 13ம் தேதி துவங்கவுள்ளன.

இத்தேர்வு சனி, ஞாயிறுகளில் மட்டும் நடக்கும்.

தேர்வு விண்ணப்பம் மற்றும் கால அட்டவணை மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு விண்ணப்பம் பெற்றவுடன் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதற்கான தேர்வுத் தொகையை வங்கி 'டிடி'யாக, "தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், சென்னை" என்ற பெயருக்கு எடுத்து தேர்வாணையருக்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்துடன் 50 ரூபாய் அபராதக் கட்டணம் சேர்த்து செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு விண்ணப்பம் கிடைக்காத மாணவர்கள், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதற்காக மத்திய மேல்நிலை கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.சி.,) விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேல்நிலை கல்வித் துறை, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை சி.பி.எஸ்.இ., செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கடந்த ஆண்டிற்கான விடுபட்ட நிதியுதவியை வழங்குவதற்காக மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் இணைய தளத்தில் உள்ளது.

இதற்கான அறிவிப்பை சி.பி.எஸ்.சி., 2008 டிசம்பர் மாதமே வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 2008ல் நடத்திய "ஏஐஎஸ்எஸ்சி' தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்று, 2008-2009ம் ஆண்டிற்கான பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ள மாணவர்கள் இந்த நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், சில அடிப்படை நிபந்தனைகளையும் மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் உள்ளது.

சி.பி.எஸ்.இ., உதவித் தொகை வேண்டி ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

மாநில கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதியுதவி கேட்டு சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒருங்கிணைந்த எம்.ஏ., வரலாறு: பல்கலை.,யில் படிக்க வாய்ப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலை., வரலாற்றுத் துறை சார்பில் ஒருங்கிணைந்த (ஐந்து ஆண்டு) முதுகலை வரலாறு (எம்.ஏ.,) படிக்கலாம் என டீன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

கடந்த கல்வியாண்டு முதல் இந்த பாடபிரிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இந்த பாடபிரிவின் மூலம் எம்.ஏ., படிக்கலாம்.

ஐ.ஏ.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பாடபிரிவில் சேரும் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., தொல்லியல் வல்லுநர்கள், ஆவணக் காப்பக காப்பாளர்கள், கல் வெட்டியல் வல்லுனர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சுற்றுலா நிர்வாகம், பத்திரிகையாளர்களாக பணிபுரியும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு 94431 91277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

என தெரிவித்துள்ளார்.

விவசாய படிப்பிற்கு 11ம் தேதி முதல் விண்ணப்பம்!

இளநிலை விவசாயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம் கூறியிருப்பதாவது:

விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து, 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 'பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், புதிய எண் பி.44, 6வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை' என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி: 26263484.

இவ்வாறு, தோட்டக்கலை வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக புகார்! திருமாவளவன் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு!!

பரங்கிப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் நேரம் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பரங்கிப்பேட்டை ஒன்றியமான சின்னூர், புதுப்பேட்டை, கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து திருமாவளவன் வாக்கு சேகரித்ததாக தெரிகிறது.

அதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக பரங்கிப்பேட்டை போலீசார், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...