ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்.) சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏ.டி.ஜி.பி.,)
ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் - ரயில்வே டி.ஐ.ஜி., - (விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,)
அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட எஸ்.பி.,).