ஏர் இந்தியா நிறுவனம், The Hindu நாளிதழ், மற்றும் தினமலர் சார்பில் 2008-09ம் கல்வி ஆண்டிற்கு தனித்திறன், தனிப்பட்ட சாதனை படைத்த ஆசிரியர்களை தேர்வு செய்து, "போல்ட் விருது' வழங்கப் பட்டது.
இதற்காக சென்னையில் நடந்த நேர் காணலில் நமதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி தமிழாசிரியை தமிழ்ச்செல்வி நாராயணசாமி கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து "போல்ட் விருது' பெற்றுள்ளார்.
இதே போல் நமதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி இரண்டமிடம் பெற்று "போல்ட் விருது' பெற்றார். இவர்களுக்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, The Hindu நாளிதழ் ஆசிரியர் ராம், ஏர் இந்தியா நிர்வாகிகள் கையெழுத்திட்ட நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஞாயிறு, 1 மார்ச், 2009
பெண் ஆசிரியைகள் நியமிக்க செழியன் கோரிக்கை!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் செழியன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்:
அதில் ,
என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில் ,
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தகராறு செய்து கொண்டு ஆபாசமாக நடந்துக் கொண்டனர். ஆண் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பெண் ஆசிரியர்களே நியமிக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் நியாயமாக எதிர்பார்க்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து பெண் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில்...
உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பால், பழம், பிரட். வழங்கப்பட்டது. ஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி முனவர் ஹூஸைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால், கோமு, ஆரிபுல்லாஹ், பொறியாளர்.அருள்வாசகம் ஜாபர், ஹாரிஸ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...