ஞாயிறு, 31 மே, 2015

பரங்கிப்பேட்டையில் மக்தப் ஆண்டுத் தேர்வு (படங்கள்)

பரங்கிப்பேட்டை ஒருங்கிணைந்த மக்தப் மதரஸா (குர்ஆன் பயிற்ச்சி) திட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இயங்கி வருகிறது. இது மும்பை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது.

அன்வாருஸ் ஸூப்பா எனப்படும் இந்த பயிற்ச்சி திட்டத்தில் மக்தப் 2 முதல் 5ம் பிரிவின் கீழ் மாணவ - மாணவிகளுக்கான ஆண்டு தேர்வு இன்று மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. சுமார் 450 மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டதாக பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.






படங்கள்: நூருல்லாஹ் பாகவீ 

கோலாகலமாக துவங்கியது SSA கால்பந்து திருவிழா....!



பரங்கிபேட்டையின் புகழ்பெற்ற SSA (மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி) நினைவு கோப்பைக்கான கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக துவங்கியது. 

3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, புதுவை, கடலூர், பரங்கிபேட்டை, சிதம்பரம், காரைக்கால், அத்திக்கடை, பூதமங்கலம், கூத்தாநல்லூர், நாகூர், பொதக்குடி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் அதிராம்பட்டினம் போன்ற ஊர் அணிகளும்,  சத்தியபாமா பொறியியல் கல்லூரி அணியும் கலந்து கொள்கின்றன.

துவக்க நிகழ்ச்சியில் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர் SSA மேலாளர் G.M. நெய்னா தலைமையில் SSA விழா குழுவினர்.

படங்கள்: ஸ்மார்ட் தமீம்

நாளை பரங்கிப்பேட்டை தனியார் பள்ளி முற்றுகை

கூடுதல் கல்விக் கட்டணங்களை வசூலிக்கும் பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை (திங்கள் கிழமை ஜூன் 1, 2015) பரங்கிப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தனியார் பள்ளி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.


இதுபோன்று கூடுதல் கட்டணம் வகூலிக்கும் அனைத்து பள்ளிகளையும் முற்றுகையிட்டால் இதற்கொரு முடிவு கட்ட முடியும்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...