ஒரு சந்தோஷமான நிகழ்வு: அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் தமது கடைக்கண் பார்வையை பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலை பக்கமும், ரயிலடி பாலம் மீதும் திருப்பியுள்ளது சந்தோஷமான நிகழ்வு என்று தானே சொல்ல வேண்டும்.
செவ்வாய், 17 மார்ச், 2009
புதுப்பிக்கப்படுகின்றது முட்லூர் நெடுஞ்சாலை
ஒரு சந்தோஷமான நிகழ்வு: அரசு இயந்திரமும், அதிகார வர்க்கமும் தமது கடைக்கண் பார்வையை பரங்கிப்பேட்டை-முட்லூர் நெடுஞ்சாலை பக்கமும், ரயிலடி பாலம் மீதும் திருப்பியுள்ளது சந்தோஷமான நிகழ்வு என்று தானே சொல்ல வேண்டும்.
உழவுக்குப் படிப்பு, உழைப்போருக்கு உயர்வு
அன்று "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார் திருவள்ளுவர். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. தமிழக மாநிலத் திட்டக் குழு வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலகுக்குச் சோறு போடும் வேளாண்மை தொடர்பான கல்வி கற்போருக்கு வேலைவாய்ப்பு வீடு தேடி வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. அத்தகைய படிப்புகள் குறித்த விவரங்கள் இதோ
இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயம் போற்றப்படுகிறது. இந்தியாவில் விஞ்ஞானக் கல்வி அதிகரிப்பினால், விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் இன்றும் 50 சதவீதம் பேருக்கு வாழ்க்கைத் தொழில் விவசாயம்தான்.
இத்தொழிலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே புதிய அறிவாற்றல், சிந்தனையை வலுப்படுத்தவும் 1868-ம் ஆண்டிலேயே விவசாயக் கல்வி வடிவமைக்கப்பட்டுவிட்டது.
சைதாப்பேட்டையில்தான் அந்த ஆண்டு விவசாயப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னாளில் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கே ஓரளவு வளர்ந்து, மேம்பாடு அடைந்த பிறகு, 1920-ம் ஆண்டில் வேளாண் கல்வி நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
கோவையில் உள்ள வேளாண் கல்லூரி -ஆராய்ச்சி நிலையம்தான் பின்னர் 1958-ம் ஆண்டு வேளாண் பட்ட மேற்படிப்பு மையமாக அங்கீகாரம் பெற்றது. மதுரையிலும் இதே போல் வேளாண் ஆராய்ச்சி மையம், வேளாண்மைப் பல்கலைக்கழகமாக 1971-ம் ஆண்டு விசுவரூபம் பெற்றது.
1972-ம் ஆண்டு தோட்டக் கலைக்கான பி.எஸ்ஸி., 80-ல் பி.எஸ்ஸி. மனையியல் பட்டப் படிப்பு ஆகியவை தொடங்கப்பட்டன.
பிறகு, 1984-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவதாக வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டது.
1985-ம் ஆண்டில் கோவையில் பி.எஸ்ஸி. வனவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
1989-ல் நான்காவதாக திருச்சி, குமுளூரில் தொடங்கப்பட்டு, பிறகு நவலூர் குட்டப்பட்டுக்கு மாற்றப்பட்டது.
தற்போது, பெரியகுளத்தில் தோட்டக் கலையியல் கல்லூரியும் மேட்டுப்பாளையத்தில் வனவியல் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் அறிவியல் மேம்பாட்டுக்கு ஏற்ற வகையில் தற்போது வேளாண் துறை சார்ந்திருந்த உணவுப் பதனம் குறித்த கல்வி பொறியியல், தொழில்நுட்பக் கல்வியாக மாறிவிட்டது. தற்போது பல கல்லூரிகளில் பி.டெக். (உணவுப் பதனப் பொறியியல்) என்ற பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது.
அதிலும் வேளாண் உயிரியல் தொழில்நுட்பம் (Agriculture Bio Technology), தோட்டக் கலையியல் (Horticulture) ஆகிய பி.டெக். பட்டப் படிப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. உலக அளவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை ஒட்டி, எரிசக்தி, சூழல் பொறியியல் (Energy and Environmental Engineering) என்ற பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது.
இத்துறை மேலும் விரிவடைய வேண்டுமானால், ஆய்வுகள், விரிவாக்கப் பணிகள் தேவை. அதற்காக தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 32 ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் வேளாண் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றுக்குப் பெரிதும் உதவுகின்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 950 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்வி நிறுவனங்கள் "ஐ.சி.ஏ.ஆர்.' எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council for Agriculture Research) கண்காணிப்பில் உள்ளன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்பட மொத்தம் 31 வேளாண் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உள்ளன.
இவற்றில் 5 தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள், 3 மத்திய பல்கலைக்கழகங்கள். இவற்றில் 11 வகையான வேளாண்மைப் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. எல்லா வகையான வேளாண்மைப் பல்கலைக்கழகங்களையும் சேர்த்துப் பார்த்தால், நாட்டில் மொத்தம் 39 வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
அவற்றின் விவரங்கள் (அடைப்புக் குறிகளில் மாநிலங்கள்) :
1) ஏ.ஜி. ரங்கா வேளாண் பல்கலை. (ஆந்திரம்)
2) அசாம் வேளாண் பல்கலை. (அசாம்)
3) ராஜேந்திரா வேளாண் பல்கலை. (பிகார்)
4) பிர்சா வேளாண் பல்கலை. (பிகார்)
5) குஜராத் வேளாண் பல்கலை. (குஜராத்)
6) ஹரியாணா வேளாண் பல்கலை. (ஹரியாணா)
7) கிரிஷி விஸ்வ வித்யாலயா (ஹிமாசலம்)
8) ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை -வனவியல் பல்கலை. (ஹிமாசலம்)
9) எஸ்.கே. வேளாண்மை -நுட்பப் பல்கலை., ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)
10) எஸ்.கே. வேளாண்மை -நுட்பப் பல்கலை., ஜம்மு (ஜம்மு காஷ்மீர்)
11) வேளாண் அறிவியல்கள் பல்கலைக்கழகம், பெங்களூர் (கர்நாடகம்)
12) வேளாண் அறிவியல்கள் பல்கலைக்கழகம், தார்வாட் (கர்நாடகம்)
13) கேரள வேளாண் பல்கலை. (கேரளம்)
14. ஜவாஹர்லால் நேரு கிரிஷி விஸ்வ வித்யாலயம், ஜபல்பூர் (ம.பி.)
15) இந்திரா காந்தி கிரிஷி விஸ்வ வித்யாலயம்,ராய்ப்பூர் (ம.பி.)
16) டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம், அகோலா (மகாராஷ்டிரம்)
17) மராத்வாடா வேளாண் பல்கலை., பர்பானி (மகாராஷ்டிரம்)
18) கொங்கண் கிரிஷி வித்யாபீடம் (மகாராஷ்டிரம்)
19) மத்திய வேளாண்மை பல்கலை., இம்பால் (இந்திய தென்கிழக்கு)
20) மகாத்மா புலே கிரிஷி வித்யாபீடம் (மகாராஷ்டிரம்)
21) ஒரிசா வேளாண் -நுட்பப் பல்கலை. (ஒரிசா)
22) ராஜஸ்தான் வேளாண் பல்கலை. (ராஜஸ்தான்)
23) பஞ்சாப் வேளாண் பல்கலை. (பஞ்சாப்)
24) ராஜஸ்தான் வேளாண் பல்கலை., உதய்பூர் (ராஜஸ்தான்)
26) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ்நாடு)
27) சந்திரசேகர் ஆஸôத் வேளாண்-தொழில்நுட்ப பல்கலை., கான்பூர் (உ.பி.)
28) ராஜேந்திர தேவ் வேளாண்-தொழில்நுட்ப பல்கலை., ஃபைசாபாத் (உ.பி.)
29) ஜி.பி. பந்த் வேளாண் -தொழில்நுட்ப பல்கலை., பந்த் நகர் (உ.பி.)
30) பீதான் சந்திர கிரிஷி விஸ்வ வித்யாலயம், மோகன்பூர் (மேற்கு வங்கம்)
31) மேற்கு வங்க, விலங்கின - மீன் வளப் பல்கலை, கோல்கத்தா (மே.வங்கம்).
நம் நாட்டில் வேளாண் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் சேர்கிறார்கள். முதுநிலைப் படிப்புகளில் 7 ஆயிரம் பேர் வரை சேர்கிறார்கள்.
இவை தவிர, நாடு முழுவதும் 49 தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.
படிப்புகள் அடிப்படையில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் விவரம்:
படிப்புகள் :
பி.எஸ்ஸி. (வேளாண்மையியல்)
வேளாண் படிப்புகளில் முதன்மையானது இக்கல்வி. நான்கு ஆண்டுப் படிப்பு ஆகும். வேளாண் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டப் படிப்பு இது. இதில் சேருவதற்கு பிளஸ் 2 அடிப்படைக் கல்வியாகும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களோ இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களையோ படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம்.
வேலைவாய்ப்பு:
இப்படிப்பை முடித்தோருக்கு அரசு, தனியார் துறைகளில் வேளாண்மை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணி கிடைக்கும்.வேளாண் பண்ணைகள், பயிர் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரலாம்.
வங்கிகளிலும் வேளாண் அதிகாரிகளாகப் பணியாற்றலாம்.வங்கிகளின் உதவியுடன் வேளாண்மை இடுபொருள் விற்பனை மையங்களையும் தொடங்கலாம்.
பட்ட மேற்படிப்பு படித்தோர், ஐ.சி.ஏ.ஆர். நடத்தும் ஏ.ஆர்.எஸ். தேர்வு எழுதி அதில் ஆய்வாளர்களாகவும் சேரலாம்.
பட்டமேற்படிப்பு முடித்தால், உரிய தகுதியைப் பெற்று வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களாகப் பணியில் சேரலாம்.
அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர ஆர்வம் இல்லாதவர்கள், சொந்தக் காலில் நின்றும் வெற்றி பெறலாம். வேளாண்மை ஆலோசகர்களாகவோ அல்லது விவசாயத்தை ஒரு தொழிலாகத் தொடங்கியோ வாழ்க்கையில் முன்னேறலாம்.
நல்ல விதைப் பண்ணைகளை அமைக்கலாம், தரமான விதைகளை உற்பத்தி செய்து வேளாண் நிறுவனங்களுக்கும் தொழில்களுக்கும் வழங்கலாம்.
ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து கூட்டுறவு முறையில் விவசாயம் செய்யலாம்
நன்றி : தினமணி கல்வி மலர் 2007 - http://www.dinamani.com/malar/manavarmalar07/agriculture/agriculture1.asp
வினோத குரங்கு?- பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு
...ச்சேச்சே...உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே...
சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பு: மேலே இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...