சனி, 12 செப்டம்பர், 2009

தமிழ்நாடு அரசு மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு

சீர்பெறும் நீர்நிலை - செய்தியும் கோணமும்

வழக்கம் போல ஆக்கப்பணியில் மீராப்பள்ளி.
ஒழுங்காக பராமரிக்கப்படும் ஊரின் ஒன்றிரண்டு பொதுக்குளங்களில் முக்கியமானதான ஜாமியா மஸ்ஜித் மீராபள்ளியின் குளம் கடந்த பெருமழையின் போது கரை சரிந்து பொலிவிழந்து இருந்தது. தற்போது அந்த கரை ஓரம் உறுதியான செமெண்ட் காரைகள் கொண்டு பலப்படுத்தி கட்டப்பட்டு வருகிறது எனும் செய்தி, ஊரின் இயற்க்கை மற்றும் சூழல் வளங்கள் குறித்த அக்கறை கொண்டவர்களின் வயிற்றில் பால் வார்த்து உள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக பெருகிவரும் சிமென்ட் காடுகளினால் உள்ளூரின் மரங்களுக்கு மூச்சு முட்டுகிறதோ இல்லையோ, இயற்க்கை ஆர்வலர்களை நிச்சயம் கவலை கொள்ள செய்கிறது. நமது முன்னோர்கள் மிகுந்த பிரயாசையுடனும், வருங்கால சந்ததியினரின் வளவாழ்வினை கருத்தில் கொண்டும் ஏற்படுத்திவிட்டு சென்ற குளம், கிணறு, வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு, தூர்ந்து போகச்செய்தல் என்று கண்மன் பாராமல் அழித்துவரும் நமது பொறுப்பற்ற செயலால் வெள்ளம் வறட்சி என்று அல்லல்படுகிறோம்.

இந்நிலையில் ஊரில் மீதி உள்ள பள்ளிவாயில் மற்றும் கோயில் குளம்களையாவது தூர் வாரி, ஊரின் நீர்நிலை அளவுகோலான குளங்களை காப்பாற்ற மக்களிடம் பொதுக்கருத்து உருவாகிட வேண்டும் என்பது இவர்களின் அவா.

ரெட் கிராஸ் மருத்துவ முகாம்



இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, கெனடியன் ரெட்க்ராஸ் உறுதுணையுடன் நடத்திய மருத்துவ முகாம் இன்று காலை ஒரு மணி வரை சலங்குகாரத்தெரு டாடா கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஐ.ஆர். சி. எஸ் கிளை ஒருங்கிணைத்து நடத்தியது. பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் உள்ளூர் ஒருங்கிணப்பாளர் சுபாஷ் அவர்கள் நம்மிடம் ரெட் கிராஸ் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தற்போது தாய் செய் நலப்பணிகளை பிரதான நோக்கமாக கொண்டு ஒரு ப்ராஜக்ட் ஒன்றை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...