மக்களால் தேர்தெடுக்கப்பட்ட இந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு செய்தவற்றை பட்டியல் இட வழியில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக சொத்து குவித்த சாதனை(!?)புரிந்த அமைச்சர் பெருமக்களின் பட்டியல்தான் இது.கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக சொத்து குவித்து டாப் 10 –ல் முதலிடம் பெறுபவர் கே.கே.என் நேரு இவரின் இன்றைய சொத்து மதிப்பு 17,77,79,731 கடந்த தேர்தலில் இவரின் சொத்து மதிப்பு 2,83,87,516 ஏறத்தாழ 15 கோடி ரூபாய் அளவுக்கு இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பவர் “நீரா ராடியாவின் தோழி” பூங்கோதை இவரின் இன்றைய சொத்து மதிப்பு 15,43,48,480 கடந்த தேர்தலில் இவரின் சொத்து மதிப்பு 1,35,77,414. மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பரிதி இளம் வழுதி. லட்சாதிபதியாக இருந்து கோடீஸ்வரர் ஆகி இருக்கும் இவர் கடந்த தேர்தலில் 62,26,162 மட்டுமே சொத்து மதிப்பாக காட்டிய பரிதியின் இன்றைய சொத்து மதிப்பு 6,49,17,568.
அடுத்த ஏழு இடங்களை பெற்ற அமைச்சர்களின் விவரங்கள் கீழே. அடைப்புக்குறியில் அவர்களது முந்தைய சொத்து மதிப்பு
4)பொன்முடி - 8,22,32,709( 2,50,00,000)
5)எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் - 6,14,45,419( 1,04,27,000)
6)உபயதுல்லா – 9,94,65,654(5,46,55,965)
7)வெள்ளகோயில் சாமிநாதன் - 4,85,85,116(86,09,911)
8)வீரபாண்டி ஆறுமுகம் - 4,94,28,803(1,05,58,114)
9)துரைமுருகன் - 6,20,03,389(2,33,33,249)
10)பொங்கலூர் பழனிச்சாமி - 15,66,63,000(12,23,12,951)
இவர்களுக்கும் மேலான இடத்தை ஒருவர் பிடித்திருக்கிறார். அவர்தான் இவர்களின் தலைவர் "மொதல் அமைச்சர்" கருணாநிதி மேலே குறிப்பிட்டுள்ள அனைவரையும் விட அதிக அளவு சொத்து சேர்த்திருப்பதால் இவர்களோடு கருணாநிதி 44,14,93,770( 26,52,00,948) அவர்களை பட்டியல் சேர்க்காமல் முதலிடத்திற்கும் மேலான உயர்ந்த இடத்தில் வைத்து விட்டோம்.
குறிப்பு :ஜூனியர் விகடனில் வெளியான செய்தியை தழுவி எழுதப்பட்ட கட்டுரை