திங்கள், 19 அக்டோபர், 2009

சிதம்பரம் பக்கம் ஒரு ரவுண்டு


அட நம்ம புது ரயில்வே கேட்டு

நமக்கு முன்னாடி பல தலைமுறை மக்கள் பாக்காத ஆனா பாக்க ஆசைப்பட்ட ஒரு காட்சி இது .. ஆம் பிரசித்திப்பெற்ற பரங்கிபேட்டை - முட்லூர் ரோடு தான் இது கண்ணால பாத்தாலே கண்ணு வலிக்கும்ன்னு இருந்த கடமுட சாலை இன்று பளபளன்னு ஆகிடுச்சி. முட்லூர் மொடக்குலேர்ந்து ரயில்வே கேட்டுக்கு பைக்குல வெறும் ரெண்டு நிமிஷம் தான் ஆகுதுன்னா பாருங்களேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பார்த்தீங்களா என்று வசனம் பேசி பெருமையாக நிற்பது நம்ம அகரம் ரயில்வே கேட் அருகே உள்ள பாலம் தான். புரியாட்டி இத கொஞ்சம் க்ளிக்கி பாருங்க.

பரங்கிப்பேட்டை உலமா பேரவை ஏற்பாடு செய்த புனித ஹஜ் வழிகாட்டல் நிகழ்ச்சி


பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ் வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று (18.10.09 ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இஷா தொழுகை வரை கவுஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி K. ஷேக் அப்துல் காதர், ஹாஜி G.M. ஜகரிய்யா மரைக்காயர், நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் தலைவர் மௌலவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் M.S. காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகிக்க, அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளும், நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு பெற நிகழ்ச்சி துவங்கியது.

மௌலவீ காரி ஹாஜி H. அப்துஸ் ஸமது ரஷாதி கிராஅத் ஓத, மௌலவீ N. நூருல்லாஹ் பாகவி கீதம் படிக்க, மௌலவீ முஜிபுர் ரஹ்மான் ரஷாதி வரவேற்புரையாற்ற, மௌலவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் M. முஹம்மது ஃபாரூக் பாகவி வாழ்த்துரை வழங்க, மௌலவீ ஹாஜி M. அப்துல் காதிர் மரைக்காயர் உமரி நிகழ்ச்சி துவக்கவுரையாற்ற இனிதே துவங்கியது.

இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் மௌலவீ காரீ அல்ஹாஜ் A. சித்தீக் அலி பாகவீ, மௌலவீ ஹாஃபிழ் S.R. கவுஸ் முஹ்யித்தீன் மன்பஈ மற்றும் மௌலவீ அல்ஹாஜ் M.Y. இஸ்மாயில் நாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மௌலவீ ஹாஃபிழ் A. லியாகத் அலி மன்பஈ நன்றியுரையாற்ற, துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இச்சிறப்பு மிகு வழிகாட்டல் நிகழ்ச்சியில் இவ்வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிமார்கள் உட்பட ஏராளாமான பொது மக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

களத்திலிருந்து... நமது செய்தியாளர் - புகைப்படங்கள் உதவி : கிரஸன்ட் நல்வாழ்வுச் சங்கம்

ஸ்டேட் வங்கி மாதிரித் தேர்வு

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட பரங்கிப்பேட்டை ஒன்றிய ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை

அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்காணல்

சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...