பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 11 மார்ச், 2011 0 கருத்துரைகள்!

அடுத்த 45 நிமிடங்களில் சுனாமி
இன்னும் 45 நிமிடங்களில் இந்தோனேசியாவை சுனாமி தாக்கும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இதனை அல்ஜசீரா தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் வருடம் ஏற்பட்ட மிகப்பெரும் சுனாமியின் போது மிகப்பெரும் அழிவினை சந்தித்த நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க>>>> "அடுத்த 45 நிமிடங்களில் சுனாமி"

0 கருத்துரைகள்!

ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானின் கடற்கரை நகரங்கள் பெரும்பாலானவை உருக்குலைந்தன. ஏராளமான வீடுகளும் வாகனங்களும் சுனாமி வெள்ளத்தில் இடிபாடுகளாக அடித்துச்செல்லப்பட்டு கொண்டுள்ளன. பல லட்சம் கோடி ரூபாய்கள் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்துக்கு அருகே பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் உருவானது. இதன் அளவு 8.9 புள்ளியாக ரிக்டரில் பதிவானது. இதனை அதுத்து ஜப்பானின் பெரும்பாலான கடரோலப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வேகவேகமாக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சில மணிநேரங்களில் சுமார் இருபத்தியைந்து அடி உயர பயங்கரமான சுனாமி அலைகள் அலை அலையாக தாக்கத்தொடங்கின.
முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிதைந்து போயின்ருந்த வீடுகளை குப்பைகூலங்கலாக தள்ளிக்கொண்டு கடலில் சேர்த்தன ஆழி பேரலைகள். எண்ணை கிணறுகள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவை உடனடியாக மூடப்பட்டுள்ளன. முக்கிய நகரில் உள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிகின்றது. ஜப்பானின் வட கிழக்கு பகுதி முழுவதும் மின் விநியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பும் முற்றிலும் இயங்கவில்லை. பெரும் உயிர் சேதம் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகளில் வேகமாக ஈடுபட மக்களை ஜப்பான் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மீட்பு பணிகளுக்கென உடனடியாக 900 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷியா, ஆஸ்திரேலியா, தைவான் உள்ளிட்ட பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மக்கள் சுனாமி பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும் வாசிக்க>>>> "ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; தொடர் சுனாமி; மாபெரும் சேதம்"

0 கருத்துரைகள்!தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,
எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் அப்பாஸ்
மேலும் வாசிக்க>>>> "காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234