அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். திறந்த ஜீப்பில் வீதி விதியாக வலம் வந்த அவர், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் முஸ்லிம் மக்களிடம் மீராப்பள்ளி வாயிலில் வாக்கு சேகரித்தார்
இந்நிகழ்ச்சியில் நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிதம்பரம் மூசா, சாஹுல், வல்லரசு, அப்துல் ரஹீம், அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மலை.மோகன், மாரிமுத்து, ஷாஜஹான், அன்சாரி, காமில், சங்கர், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜாக்கீர், பிலால், செய்யது, ஹஸன் அலி, தே.மு.தி.க நிர்வாகிகள் அலி முஹம்மது கவுஸ், ஜின்னா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி கவுஸ் ஹமீது, மற்றும் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர். வேட்பாளருடன், தோழமை கட்சியினர் இரு சக்கர வாகனங்களில் தங்கள் கட்சி கொடியினை ஏந்தியவாறு நகரில் வலம் வந்தனர். தேர்தலுக்கு இன்னும் 11 தினங்களே இருப்பதால் பரங்கிப்பேட்டை பகுதியில் தேர்தல் கால நிலை சூடுபிடித்துள்ளது.