பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013 0 கருத்துரைகள்!


ஜம்மியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக நோன்பு பெருநாள் இன்று பரங்கிப்பேட்டையில்கொண்டாடப்பட்டது. இன்று (08-08-2013) காலை 8.00 மணிக்கு வாத்தியாப்பள்ளி பாத்திமா நகர் திடலில் சிறப்பு தொழுகையும், தொழுகைக்கு பின்னர் தமிழில் உரையும் நிகழ்த்தப்பட்டது
மேலும் வாசிக்க>>>> "நோன்பு பெருநாள்: ஜாக் அமைப்பு"

0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் துவங்கப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தி அடைவதையொட்டி நோன்பு துறக்கும் நிகழ்ச்சியும் சிறப்பு பொதுக்குழுவும் நடைபெற்றது.  பி.எம்.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை மவ்லவி ஹெச்.அப்துஸ் ஸமத் ரஷாதி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். 

கூட்டத்தில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் நிறுவனர்கள் வஜ்ஹுதின், அபுல்ஹஸன், முன்னாள் நிர்வாகிகள் அன்வர் ஹஸன், ரியாஸ் அஹமது, கவுஸ் ஹமீது, ஹமீது மரைக்காயர், பொறியாளர் சாஹுல் ஹமீது, தாரிக் ஹுஸைன் ஹம்துன் அப்பாஸ் உள்ளிட்டோர் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் கேப்டன் எம்.ஹமீது அப்துல் காதர் சிறிது நேரம் உரையாற்றினார் .

நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற நிர்வாகிகள் அமர்வில் மீ.மெ.சபீக் அஹமது கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காலித், ஜெய்னுல்லாபுதீன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் வாசிக்க>>>> "கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!"

0 கருத்துரைகள்!வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "வளைகுடா சிங்கப்பூரில் பரங்கிப்பேட்டையர்கள் உற்சாகம்!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234