ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாயத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் மனிதநேய விழாவும், மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும் மீராப்பள்ளித் தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றன.
நிகழ்ச்சியினை M.H. கபீர் அஹமது மதனி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர் K.V.S ஹபீப் முஹம்மது அவர்களும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் M. அப்துஸ் ஸமது மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K. பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மாற்று மதத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல் பரிசும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன. வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது .
விழாவினை நிகழ்ச்சி அமைப்பாளர் L. ஹமீது மரைக்காயர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.