புதன், 20 மே, 2009

கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சு பயிற்சி

உலகமே கணினி மயமாகிவிட்ட இந்த காலத்தில் கிரசென்ட் நல் வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தட்டச்சு பயிற்சி முகாம் மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.

மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.

Source: CWO / Friends PNO

மாநில அளவிலான கிரிக்கெட் கடலூரில் 30ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்குகிறது.

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், காஸ்மாபாலிடன் கிரிக்கெட் கிளப், மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்கும் போட்டிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் வரும் 24ம் தேதிக்குள் பெயர், நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விவரங்களுக்கு கூத்தரசன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர், எண் 5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 94425 21780 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவ இளைஞர்களுக்கு பயிற்சி! கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேச்சு!!

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவி செய்ய தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பேசினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்த கருத்தரங்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

இக் கருத்தரங்கினை தொடங்கி வைத்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் இடம் பெறுவார்கள்.

சாமியார் பேட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் சுனாமி காலத்தில் பெரும் உயிரிழப்பு, பொருளிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை கிராமங்களில் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை வாழும் பொதுமக்களிடம் பேரிடர் காலத்தில் பேரிடர் வருவதை முன்கூட்டியே அறிந்து எடுத்துச் சொல்வதுடன் அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் வழிகளுக்கான சமூக விழிப்புணர்வு தயார் நிலையை, கலாசாரமாகக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக தனியார், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பொது மக்களுக்கு உதவிகள் செய்யும் வண்ணம் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தனியார் தொண்டு நிறுவனங்களும் பேரிடர் காலங்களில் தங்களது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றார்.

தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'செம டோஸ்':

கருத்தரங்கில் பங்கேற்று தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்' விட்டார்.

கருத்தரங்கில் சுனாமி, வெள்ளம், புயலால் பாதிப்பு குறித்தும், பேரிடரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது பற்றியும் 'சீரியசாக' கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகள் சிலர் நிம்மதியாக குரட்டை விட்டு நாற்காலியிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதை கவனித்த கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அந்த அதிகாரிகளை எழுப்பி தாம் என்ன பேசினோம் என்பதை கூறுமாறு கேட்டார்.

தூங்கிய அதிகாரிகள் ஒன்றும் புரியாமல் 'திருதிருவென' விழித்தனர்.

உடனே கலெக்டர் அதிகாரிகளுக்கு 'செம டோஸ்' விட்டார்.

தொடர்ந்து கூட்டம் கலகலப்பாக நடந்தது.

அடிப்படை வசதிகள் இல்லாததால் பொலிவிழந்த புதுச்சத்திரம் வாரச் சந்தை!

புதுச்சத்திரம் வாரச் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் படிப்படியாக பொலிவிழந்து வருகிறது.

பொதுமக்களின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் மெயின்ரோடு பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாய் கிழமை தோறும் வாரச் சந்தை நடந்து வருகிறது.

புதுச்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சிறுபாளையூர், மேட்டுப் பாளையம், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, பெரியப்பட்டு, சாமியார் பேட்டை உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வாரச் சந்தைக்கு வந்து செல்வது வழக்கம்.

கிராம மக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பழங்கள், துணிமணிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் கூடுவர்.

ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.

நகர பகுதிக்கு பஸ் பிடித்து சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வாரச் சந்தையில் பொருட்களை வாங்குவது கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதனால் வாரச் சந்தைகளில் கூட்டம் அதிகளவில் இருந்து வந்தது.

சமீப காலமாக புதுச்சத்திரம் வாரச் சந்தை நடக்கிறதா என்கிற அளவில் படிப்படியாக சந்தை பொலிவிழந்து வருகிறது.

ஆட்டுச் சந்தை, கோழி விற்பனை முற்றிலுமாக குறைந்துவிட்டது.

காய்கறி, பழங்கள் மட்டும்தான் தற்போது கிடைக்கிறது.

சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

அத்துடன் சுகாதார வசதியின்மை, இட வசதியில்லாமல் நெருக்கடி போன்ற பல காரணங்களால் வாரச்சந்தை பொலிவிழந்து விட்டது.

இதே நிலை நீடித்தால் வாரச் சந்தை நடைபெறுமா என்ற சூழ்நிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இப் பிரச்னையை போக்கி வாரச் சந்தை மீண்டும் பழைய நிலையில் சிறப்பாக இயங்க அப்பகுதி ஊராட்சி மன்றம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

காந்தி கிராம பல்கலை.,யில் 120 பாடத்திற்கு விண்ணப்பங்கள்!

காந்தி கிராம பல்கலை.,யில் நடப்பு கல்வியாண்டில் வேலை வாய்ப்பிற்கான படிப்புகள் உட்பட 120 பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சிறுதொழில், கூட்டுறவு, ஊரக தொழில்கள், ஊரக வளர்ச்சிக்கான திட்டமிடுதல் ஆகியவற்றில் மேலாண்மை படிப்புகள் (எம்.பி.ஏ.,), ஜியோ இன்பர்மேடிக்ஸ், எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட சுயநிதி படிப்புகள், காதி மற்றும் கைத்தறி தொழில் நுட்பம், பேக்கரி தொழில் நுட்பம், பட்டு வளர்ப்பு உள்ளிட்ட வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகள், எம்.ஏ., ஒப்பிலக்கியம் மற்றும் கலாச்சார படிப்பு, வளர்ச்சி நிர்வாகம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்பு காந்தி கிராம் பல்கலை.,யில் வழங்கப்படுகின்றன.

மேலும் இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு 0451-2452 371 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கல்விப்பிரிவில் தகவல் பெறலாம்.

இத்தகவலை பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) எம்.எஸ். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முன் உஷார்! குறைந்த மதிப்பெண் கிடைக்கவும் வாய்ப்பு!!

பிளஸ் 2 மாணவர்கள், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பம் செய்யும் முன், பாட ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று அவசியம் தேவை என்றால் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என, கண்ணை மூடிக்கொண்டு விண்ணப்பித்தால், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதுவதற்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

விடைத்தாள் நகல் பெற்ற ஐந்து தினங்களுக்குள், மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீடு கோரியோ மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் பலமுறை யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே எந்த ஆசிரியர் விடைத்தாளைத் திருத்தினாரோ, அதே ஆசிரியர் மீண்டும் மறுகூட்டல் செய்யவோ அல்லது விடைத்தாளைத் திருத்தவோ மாட்டார்.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் குழுதான், இப்பணிகளை மேற்கொள்ளும்.

சில மாணவர்களுக்குத் தவறுதலாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கலாம்; சில விடைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு விடைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் மிகவும் அதிகம் என ஆசிரியர் கருதினால், மதிப்பெண்கள் குறையலாம்.

கவனமின்மையால் கூடுதலாகத் தரப்பட்ட மதிப்பெண்களும் குறைக்கப்படும்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதுதான் இறுதி மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முந்தைய மதிப்பெண் ரத்தாகி விடும்.

அதிக மதிப்பெண்களுக்கு ஆசைப்பட்டால், இருக்கிற மதிப்பெண்களையும் இழக்கக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.

எனவே, மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்றதும், பெற்றோர் மற்றும் பாட ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுவது நல்லது.

சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிகள்

மதுரை டி. கல்லுப்பட்டி டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில் நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் சுய தொழில் ஆர்வலர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது.

பயிற்சிகளின் விவரம்:

  • ஐந்து மாத கால தையல் மற்றும் எம்பிராய்டரி (மகளிர் மட்டும்)

  • நான்கு மாத கால எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி

  • மூன்று மாத கால கட்டிங் மற்றும் டெய்லரிங் (மகளிர் மட்டும்)

  • இரண்டு மாத கால ஃபிட்டர், பிளம்பர் மற்றும் பம்ப் மெக்கானிசம் பயிற்சி

  • ஒரு மாத கால டிடர்ஜெண்ட் சோப்பு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

உதவித்தொகை பயிற்சிகள்:

  • ஆறு மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மூன்று மாத கால காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு

  • மோட்டார் வைண்டிங் உள்ளிட்ட பயிற்சிகளும்

  • இரண்டு மாத கால நோட்டு புத்தகங்கள் தயாரித்தல்

  • குளியல் மற்றும் சலவை சோப்பு தயாரித்தல்

  • பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல்

  • மண்பாண்டம் தயாரித்தல்

  • ஒரு மாதகால ஸ்பைசஸ் மற்றும் மசாலா தயாரித்தல்

  • மோட்டார் வைண்டிங் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.

18 வயதுள்ள குறைந்தபட்சம் 8-வது வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை திட்டத்தில் உள்ள பயிற்சிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்குபவருக்கு மாதம் ரூ. 800 உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை ரூ. 25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற ரூ. 35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரத்துடன் பெற விரும்பும்

பயிற்சியைக் குறிப்பிட்டு தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ. 5க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து மே 31 - ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  • டாக்டர் ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம்,

  • காந்தி நிகேதன் ஆசிரமம்,

  • டி. கல்லுப்பட்டி - 625 702,

  • மதுரை மாவட்டம்.

  • தொலைபேசி: 04549 - 272 365.

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளாறு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய பேரூராட்சிகளின் குறுக்கே மிகப்பெரிய வெள்ளாறு செல்கிறது.

இந்த வெள்ளாறு வழியாக கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை பொது மக்கள் படகு மூலம் சென்று வந்தனர்.

மழைக் காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது படகுகள் செல்வது நிறுத்தப்படும்.

இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வியாபாரிகள் சிதம்பரம் வண்டிகேட், புவனகிரி வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தனர்.

இதே போல் பரங்கிப்பேட்டை பகுதி மக்களும் சிதம்பரம் வந்து தான் கிள்ளைக்கு சென்று வந்தனர்.

ரூ.16 கோடி

இதனால் இந்த 2 பேரூராட்சிகளில் உள்ள மக்கள் கிள்ளை- பரங்கிப்பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.

இதில் சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரம் வெள்ளாற்றை முற்றிலும் மணல் கொட்டி தண்ணீர் வராமல் தடுத்துவிட்டனர்.

பின்னர் பில்லர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த பில்லர் 150 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.

ராட்சத இரும்பு

தற்போது இரவு, பகலாக பெரிய ராட்சத இரும்பு கம்பிகள் மூலம் பில்லர் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த பணியில் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரிகள், ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இந்த வேலைகள் வருகிற மழைக் காலத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...