ஞாயிறு, 4 மே, 2008

ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம்



பரங்கிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாயில்களின் இமாம்களும் இணைந்த கூட்டமைப்பே நகர ஜமாஅத்துல் உலமா பேரவையாகும். பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம் கடந்த மாதம் 20 முதல் 30 தேதி வரை இனிதே நடைபெற்றது. ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் அல்குர்ஆனை அணுகும் முறை, இஸ்லாத்தின் நான்கு இமாம்களின் பங்களிப்பு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் போன்ற தலைப்புக்களில் பேச்சுப்போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் போட்டிகள் இன்ஷா அல்லாஹ் மே மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது. வருங்கால சமுதாயத்தை மார்க்க பற்றுள்ளதாகவும், தெளிந்த மார்க்க அறிவை பெற்றதாகவும் பெற்றோரையும் மற்றோரையும் மதிக்கக்கூடியதாகவும் கல்வியில் முன்னிலை பெற்றதாகவும், ஒழுக்கமுள்ளதாகவும் வார்த்தெடுப்பதே தங்களது குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தும் ஜமாஅத்துல் உலமா பேரவையினரின் பணி சிறக்க துஆ செய்வோம்.

மர்ஹுமாகிவிட்டார்கள்.

ஹக்கா சாஹிப் தெருவில் மர்ஹும். காதர்கான் அவர்களின் மகனாரும், ஜனாப். மன்சூர் அலி, காதர் அலி அவர்களின் தந்தையாருமாகிய சிராஜுத்தீன் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...