பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நடைபெற்று வரும் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று மாலை வாத்தியாப் பள்ளி திடலில் நடைபெற உள்ளது. இன்று காலை பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி (Team A) புதுச்சேரி மற்றும் கடலூர் அணிகளுடன் விளையாடியதில் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற ஆட்டத்தில் நாகூர் அணியுடன் புதுச்சேரி மோதியதில் 0-1 கோல் வித்தியாசத்தில் நாகூர் அணியை வீழ்த்தியது. இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஆட்டங்களில் புதுச்சேரி அணி கடலூர் அணியுடனும் பரங்கிப்பேட்டை அணி நாகூர் அணியுடனும் மோத உள்ளது.
படங்கள்: ஹசன் அலி
தகவல்: கிங் காலித்