அருகே சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் மாலை சொந்த ஊருக்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் நின்று பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் நின்று பயணம் செய்த 3 பெண்கள் செல்வி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து அபேஸ் செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டார். உறவினர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் அந்த 3 பெண்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் உஸ்மான், ஏட்டு குணசேகரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே மரியாங்குப்பத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி நிர்மலா (41), மணி மனைவி காமாட்சி (35), ராமச்சந்திரன் மனைவி பிரேமா (45) என்பதும், இவர்கள் அக்காள் - தங்கைகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2009
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு; பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது
விடுதலைப்புலிகள் ஊடுருவலா? பரங்கிப்பேட்டை, கடலூர் கடற்கரை கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீஸ் சோதனை
இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல் படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Source : மாலை மலர்
டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) பணிவாய்ப்பு
- 1.7.2009 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வும் அதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
- எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாக நடத்தப்படும்.
- பார்மசி / பார்மாசூடிக்கல் சயின்ஸ் இவற்றில் 200 கேள்விகள் இடம் பெறும். பட்டப்படிப்பு தரத்திலான தேர்வு இது.
- கிளினிகல் பார்மகாலஜி பிரிவினருக்கு பட்டமேற்படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வானது ஜூலை 26 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.155.
இதற்கு http://tnpsconline.tn.nic.in/ என்னும் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
பிரிண்டட் விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 6, 2009.
Source : கல்வி மலர்
தரைப்படையில் ஹவில்தார் பணிவாய்ப்பு
இது பற்றிய விபரங்கள்...
மொத்த காலியிடங்கள் - 273
- இதில் அறிவியல் பிரிவினருக்கு 133 இடங்களும், கலைப் பிரிவினருக்கு 140 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்:
- அக்டோபர் 5, 2009 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- குரூப் எக்ஸ் பணிகளுக்கு பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகளில் ஒன்றுடன் பி.எட்., தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
- குரூப் ஒய் பணிகளுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருந்தால் போதும். பி.எட்., அவசியமில்லை.
- பி.எஸ்சி., தகுதியை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் குறைந்தது 2 பாடங்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
- பி.ஏ., தகுதியை ஆங்கில / இந்தி / உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம் அல்லது சமூகவியல் பாடங்களில் இரண்டுடன் முடித்திருக்க வேண்டும்.
- பொதுவாக ராணுவப் பணிகளுக்குத் தேவைப்படும் உடற்தகுதியைப் பெற்றிருப்பது முக்கியம்.
- உடற்தகுதித் திறனறியும் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
- இத்தேர்வில் 2 பகுதிகள் இடம் பெறும்.
- ஒன்று அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கேள்விகளைக் கொண்டிருக்கும்.
- மற்றொரு பகுதியில் பி.எஸ்சி., / பி.ஏ., பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
சில முக்கியக் குறிப்புகள்:
- திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- 25 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் திருமணமானவர் என்றால் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முகவரி: HQ Rtg Zone, Fort Saint george, Chennai 600009.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : ஏப்ரல் 25, 2009.
Source: கல்வி மலர்
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...