பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 22 ஏப்ரல், 2009 0 கருத்துரைகள்!

தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி விடுதிகள் மூலம் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

இவற்றில் 860 மாணவ-மாணவிகள் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

வரும் 2009-10ம் ஆண்டிற்கான புதிய மாணவ-மாணவிகள் தேர்வு, 385 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், அனைத்து விளையாட்டுப் பள்ளிகளிலும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இடம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்வுபெறும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வரும் மே மாதம் 9, 10ம் தேதிகளில் மண்டல அளவிலான தேர்வுகள் திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் நடக்கும்.

மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள், திருச்சியில் மே மாதம் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும்.

மாணவிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்குமான மாநில அளவிலான தேர்வுகள், திருவண்ணாமலையில் மே மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்"

0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 • இந்த தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., - பி.யூ.சி., பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2009 அன்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.

 • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

 • தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

 • அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருத்தல் கூடாது.

 • ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்க கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம்.

 • மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.

 • மேலும் அவரது பெற்றோர், பாதுகாவலர் தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும்.

 • குடும்ப ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

போன்ற தகுதியுள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

 • ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

 • பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தோர் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

 • விண்ணப்பம் 1.4.2009 முதல் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வழங்கப்படுகிறது.

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தினமும் இதே நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.

 • இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பத்தை மே 31ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

 • வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பித்தல், இதுவரை பயன் பெற்ற வங்கி புத்தகத்தில் பணம் அனுப்பிய விவரங்களின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: தினமலர்

மேலும் வாசிக்க>>>> "வேலையற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வினியோகம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டு கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க தொடக்க நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், நகர பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தில் அரபு பேச்சு பயிற்சி, மார்க்கச் சட்டங்கள், தஜ்வீத் முறையில் திருக்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் ஹதீஸ் மனப்பாடம், கிராஅத் பயிற்சி, நடைமுறை ஸுன்னத்துகள், நாற்பது நபிமொழிகள் மற்றும் ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவுகள் என மார்க்கம் சம்பந்தமான அனைத்து கல்வியையும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு விபரங்கள் பெற பேரவையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வாசிக்க>>>> "கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம் துவக்கம்"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234