கடலூரின் பழைய நகரமான வரலாற்று சிறப்புமிக்க O.T. என்றழைக்கப்படும் கடலூர் துறைமுகத்தின் முக்கிய நுழைவு சாலையான சங்கர நாயுடு தெரு. பல ஆண்டுகளாய் புதிய சாலைக்காக தவமாய் தவமிருந்தது. இடையில் சில வருடங்களுக்கு முன்பு, புதிய சாலை போடுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி கடைசியில் நின்று போய்விட்டது.
O.T. மக்களோடு நெருங்கிய தொடர்பிலிருக்கும் பரங்கிப்பேட்டை மக்களின் நீண்ட கால கனவு இன்று நனவாகியுள்ளது. தற்போது இந்த தெருவில் புதிய தார் சாலை போடப்பட்டு, அட..நம்ம ஊர் தானா? என்று வியப்பின் எல்லைக்கே கடலூர் O.T. நகர மக்களை இட்டு சென்று, புதியதான தார் சாலைகள் மூலம் கடலூர் முதுநகர் இன்று புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது.
சங்கர நாயடு தெருவின் பழைய சாலை