கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான QATAR MUSLIM ASSOCIATION OF PORTONOVO(Q-MAP) சிறப்புக் கூட்டம் செய்யத் ஃபத்தா வசிப்பிடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. முஹம்மது சிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய நிர்வாகக் குழுஅமைக்கப்பட்டது.
துணைத் தலைவர்: செல்ல மரைக்காயர்
செயலாளர்: ஹபீப் நூர்
துணைச் செயலாளர்: காஜா நஜிமுதீன்
பொருளாளர்: யாசர் அரஃபாத்
கூட்டத்தில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கானதேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலை தவிர்த்து தேர்வு கமிட்டி முலம் ஜமாஅத்தின் புதிய தலைவர் மற்றும்நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பானஅறிவிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள "தேர்தல் கமிட்டியின் "முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தும், தேர்வுக் கமிட்டி எவ்வாறு அமையவேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் துணைச்செயலாளர் காஜா நஜிமுதீன் நன்றியுரையாற்றிகூட்டத்தை நிறைவு செய்தார்